தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 13 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தரும்புரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 10 மணி வரை மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், பணியின் நிமித்தம் செல்லக்கூடியவர்கள் சிரமங்களுக்கு உள்ளாகக் கூடும்.
சென்னையில் அடையாறு, கோட்டூர்புரம், அசோக் நகர், வடபழனி, கிண்டி, ஆதம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்து வருகிறது.
சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், இன்று (நவம்பர் 24) முதல் நவம்பர் 27ஆம் தேதி வரை 24.11.2022 முதல் 27.11.2022 வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் எதிர்பார்த்த அளவு சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கவில்லை. ஆனால் பனிப்பொழிவு, குளிர் அதிகரித்துள்ளது.