மழைக் காலம் வந்து விட்டது.. இந்த உணவுகளை தவிர்ப்பது அவசியம்..!

மழைக் காலம் வந்தாலே தொண்டை கரகரப்பு, நெஞ்சு சளி, சைனஸ், தலைவலி, ஆஸ்துமா, டைபாய்டு, மஞ்சள் காமாலை போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே,உணவு விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.

மழை காரணமாக, நோய் தொற்றுகள் அதிகம் ஏற்படக் கூடிய அபாயம் இருக்கிறது. எனவே, நீங்கள் சாப்பிடும் உணவுகளில் அதிக கவனம் தேவை. அதேபோல ஒரு சில உணவுகளை தவிர்ப்பது அவசியம். இல்லையெனில், டைபாய்டு மற்றும் மஞ்சள் காமாலை போன்ற நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்படலாம்.

இந்நிலையில், தெலுங்கானாவில் டைபாய்டு மற்றும் வயிற்றுப்போக்கு பாதிப்புகள் அதிக அளவு பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் டெங்கு பாதிப்புகளுக் அதிகரித்து வருகின்றன. இதற்கு சாலையோர உணவுகள் என்று சொல்லக்கூடிய ‘பானி பூரி’ தான் காரணம் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மாநில சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் ஜி.சீனிவாச ராவ் கூறுகையில், “சுகாதாரத்தை உறுதிசெய்து பாதுகாப்பான குடிநீர் மற்றும் உணவுகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும்.

டைபாய்டு காய்ச்சல் ஒரு வித தொற்றுநோயாகும். இந்த தொற்று சால்மோனெல்லா டைஃபி என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இது அதிக காய்ச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்றவற்றால் வகைப்படுத்தப்படுகிறது.

இந்த தொற்று உடல் முழுவதும் பரவி, பல உறுப்புகளை பாதிக்கும். உடனடி சிகிச்சை இல்லா விட்டால், சோர்வு, வெளிர் தோல், ரத்த வாந்தி போன்ற கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தும். இது குறிப்பாக, அசுத்தமான உணவு அல்லது தண்ணீரை உட்கொள்வதன் மூலம் ஏற்படுகிறது.

எனவே, மழைக் காலத்தில் பானி பூரி மற்றும் பிற சாலையோர உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் குடிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மழைக் காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பருவகால பழங்கள், காய்கறிகள் மற்றும் கொட்டைகள் அதிகம் சாப்பிடுங்கள்.

உங்கள் வீட்டில் எங்கும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால், கொசுக்கள் அந்த இடத்தில் இனப்பெருக்கம் செய்து விடும். உணவு உண்ணும் முன்பும், கழிவறையை பயன்படுத்திய பின்பும் கைகளை நன்றாக கழுவுங்கள். வீட்டில் கொசுக்கள் வராமல் பாதுகாக்க மாலையில் அனைத்து ஜன்னல்களையும் கதவுகளையும் மூடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த பிறகு, உங்கள் கைகளை தவறாமல் கழுவுவதை உறுதிப்படுத்தவும். நீங்கள் இருமல் அல்லது தும்மலுக்கு பிறகு, உங்கள் மூக்கு அல்லது கண்களைத் தொடுவதைத் தவிர்க்கவும்” என்று தெரிவித்துள்ள அவர், டைபாய்டு காய்ச்சலை ‘பானி பூரி நோய்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.