லண்டன் பெண்ணுடன் ஏற்பட்ட நட்பு! பல லட்சங்களை இந்திய இளைஞர் இழந்தது எப்படி? எச்சரிக்கை செய்தி


லண்டனை சேர்ந்த இளம்பெண் இந்தியாவுக்கு வருவதாக கூறி இளைஞர் ஒருவரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

லண்டன் பெண்ணுடன் நட்பு

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூரை சேர்ந்தவர் சூரஜ் பிரகாஷ் குர்ஜர் (31).
இவருக்கு பேஸ்புக் மூலம் விக்டோரியா ஹஸ்டின் என்ற பெண் நட்பாகியுள்ளார், பின்னர் வாட்ஸ் அப் மூலம் மிகவும் நெருக்கமாகியுள்ளனர்.

அவர் இந்தியாவுக்கு வர விரும்புவதாக சூரஜிடம் விருப்பம் தெரிவித்த நிலையில் லண்டனில் இருந்து டெல்லிக்கு வருவதற்கான விமான டிக்கெட் பெறுவதற்காக ஹசினாவுக்கு சூரஜ் பணத்தை அனுப்பியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 14ஆம் திகதி சூரஜுக்கு ஒரு போன் வந்தது, அதில் பேசிய பெண், உங்களின் தோழி விக்டோரியா டெல்லி விமான நிலையத்தில் இருக்கிறார்.

அவரிடம் ஐந்து கோடி மதிப்பிலான டிமாண்ட் டிராப்ட் உள்ளது. இதனால், அவர் கைது செய்யப்பட்டு, உடமைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
விக்டோரியாவை விடுவிக்க பணம் கட்ட வேண்டும் என தொகையை கேட்க சூரஜ் வெவ்வேறு கணக்குகளில் ரூ. 7 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் வரை அனுப்பியிருக்கிறார்.

லண்டன் பெண்ணுடன் ஏற்பட்ட நட்பு! பல லட்சங்களை இந்திய இளைஞர் இழந்தது எப்படி? எச்சரிக்கை செய்தி | Man Cheated Money Girl Uk London

Social Media/bhaskar/indiapostsen

மோசடி அம்பலம்

மேலும் 15ஆம் திகதி விக்டோரியா ஜோத்பூருக்கு வந்துவிடுவார் எனவும் அப்பெண் சூரஜிடம் கூறினார்.
ஆனால் மீண்டும் 15ஆம் திகதி சூரஜுக்கு போன் செய்த அப்பெண், அவர் அனுப்பிய பணத்தை பரிமாற்றம் செய்யமுடியவில்லை என்று கூறினார்.

இது தொடர்பாக பிரித்தானிய நீதிமன்றத்தில் அனுமதி உத்தரவு பெற வேண்டும் என கூறி மேலும் பணம் கேட்க சூரஜ் அந்த பெண் கூறிய கணக்கில் ரூ.4.79 லட்சத்தை டெபாசிட் செய்துள்ளார்.
இதன்பிறகு தான் சூரஜுக்கு சந்தேகம் ஏற்பட்டு நண்பர்கள் உதவியுடன் டெல்லி விமான நிலையத்தில் விசாரித்தார்.

அப்போது தான் அது போன்று யாரையும் அதிகாரிகள் கைது செய்யவில்லை என தெரியவந்தது.
பின்னர் தான் மிகப்பெரிய அளவில் மோசடி செய்து ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சூரஜ் இது தொடர்பில் பொலிசில் புகார் கொடுக்க அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். 

லண்டன் பெண்ணுடன் ஏற்பட்ட நட்பு! பல லட்சங்களை இந்திய இளைஞர் இழந்தது எப்படி? எச்சரிக்கை செய்தி | Man Cheated Money Girl Uk London

 PIXABAYSource link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.