இந்தியாவில் அறிமுகமானது லாவா பிளேஸ் Nxt பட்ஜெட் ஸ்மார்ட்போன் | விலை and அம்சங்கள்

நொய்டா: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் லாவா பிளேஸ் Nxt ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் விலையில் இந்த போன் விற்பனை செய்யப்பட உள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம்.

இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது பன்னாட்டு எலெக்ட்ரானிக்ஸ் கம்பெனியான லாவா இன்டர்நேஷனல். லாவா என்ற பெயரில் எலக்ட்ரானிக் சாதனங்களை உற்பத்தி செய்து வருகிறது. மொபைல் போன், ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்றவற்றை இந்த நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. அந்த வகையில் இப்போது இந்திய சந்தையில் லாவா பிளேஸ் Nxt போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த போன் வரும் டிசம்பர் 2-ம் தேதி ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனர்களின் இல்லம் தேடி வந்து நேரடியாக போனை உத்தரவாதத்துடன் டெலிவரி செய்யும் முயற்சியை லாவா முன்னெடுத்துள்ளது. இந்த போனின் விலை ரூ.9,299 என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு அம்சங்கள்:

  • மீடியாடெக் ஹீலியோ ஜி37 புராசஸர்
  • 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
  • 6.5 இன்ச் ஹெச்.டி டிஸ்பிளே
  • 13 மெகாபிக்சல் ஏ.ஐ கேமரா + 2 மெகாபிக்சல் கேமரா + விஜிஏ கேமரா என மூன்று கேமராக்கள் பின்பக்கம் இடம்பெற்றுள்ளது
  • 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா
  • 5000mAh பேட்டரி. 32 மணி நேர பேட்டரி லைஃப்
  • டைப் சி யுஎஸ்பி போர்ட், 4ஜி இணைப்பு வசதி
  • சிவப்பு, நீலம் மற்றும் பச்சை நிறங்களில் இந்த போன் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.