இரத்தக்கறை படிந்த சுத்தியல்… ஐரோப்பிய தலைவர்களுக்கு அனுப்பிவைத்து எச்சரித்த ரஷ்ய தலைவர்


ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு மிக நெருக்கமான போர் குழு தலைவன், ரத்தக்கறை படிந்த சுத்தியல் ஒன்றை ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்து எச்சரித்துள்ளது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாக்னர் கூலிப்படை

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடு ரஷ்யா என உக்ரைன் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் அடையாளப்படுத்தியுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தே, ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு சுத்தியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இரத்தக்கறை படிந்த சுத்தியல்... ஐரோப்பிய தலைவர்களுக்கு அனுப்பிவைத்து எச்சரித்த ரஷ்ய தலைவர் | Bloodied Sledgehammer Putin Warlord Sends Eu

@getty

இந்த விவகாரம் தொடர்பில் வெளியான தகவலில், ரத்தக்கறை படிந்த சுத்தியலை அனுப்பி வைத்தவர் வாக்னர் கூலிப்படையின் உரிமையாளரான எவ்ஜெனி பிரிகோஜின் என தெரியவந்துள்ளது.

வயலின் இசைக்கருவி பெட்டி ஒன்றில் போலி ரத்தம் தோய்ந்த அந்த சுத்தியல் இருந்துள்ளது. ரஷ்யரான Yevgeny Nuzhin என்ற 55 வயது நபர் உக்ரைனுக்கு தப்பியதையடுத்து, இந்த வாக்னர் குழுவானது அவரை கடத்தி, ரஷ்யாவுக்கு கொண்டு சென்று சுத்தியலால் அடித்தே கொன்றுள்ளது.

இரத்தக்கறை படிந்த சுத்தியல்... ஐரோப்பிய தலைவர்களுக்கு அனுப்பிவைத்து எச்சரித்த ரஷ்ய தலைவர் | Bloodied Sledgehammer Putin Warlord Sends Eu

@telegram

இரத்தக்கறையுடன் சுத்தியல்

இதனிடையே, ரஷ்யாவை பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடு என குறிப்பிடுவதில் தமது கண்டனத்தை பதிவு செய்த பிரிகோஜின்,
ஐரோப்பிய நாடாளுமன்றம் எந்த சட்டத்தின் அடிப்படையில் இயங்குகிறது என்பது தமக்கு தெரியாது எனவும்,
ஆனால் எங்கள் சட்டத்தின்படி, இன்று முதல் ஐரோப்பிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவிக்கிறோம் என்றார்.

இரத்தக்கறை படிந்த சுத்தியல்... ஐரோப்பிய தலைவர்களுக்கு அனுப்பிவைத்து எச்சரித்த ரஷ்ய தலைவர் | Bloodied Sledgehammer Putin Warlord Sends Eu

@telegram

மேலும், சட்டப்பூர்வமாக அறிவிக்கும் முன்னர், தகவல் திரட்டு ஒன்றை ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைப்பதாகவும், தயாராக இருங்கள் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விவகாரத்தில் ஐரோப்பிய நாடாளுமன்றம் என்ன பதிலளித்துள்ளது என்பது வெளியாகவில்லை என்ற போதும், உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியிடம் இருந்து வேண்டுகோள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.