டெல்லி தமிழர்களுக்காக அரவிந்த் கெஜ்ரிவால் என்ன செய்தார்? – டெல்லியில் குஷ்பு பரப்புரை

டெல்லி தமிழர்களுக்காக அரவிந்த் கெஜ்ரிவால் என்ன செய்தார்? சாராயதில் மட்டும் பை ஒன் கேட் ஒன் கொடுத்து அனைவரையும் குடிப்பழக்கத்திற்கு அடிமை ஆக்குகிறார் என டெல்லி பரப்புரையில் பாஜக நிர்வாகி குஷ்பு பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் மாநகராட்சி தேர்தல் டிசம்பர் 4ம் தேதி நடைபெற உள்ள நிலையில், டெல்லியில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்த மாநகராட்சி தேர்தலில் பாஜக – ஆம் ஆத்மிக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆம் ஆத்மி மீது உழல் குற்றச்சாட்டை முன்வைத்து பாஜக தேர்தல பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. டெல்லியில் தமிழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் வானதி சீனிவாசன் , குஷ்பூ உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் , இன்று டெல்லி மாநகராட்சி தேர்ததில் பாஜக வேட்பாளரை ஆதரித்து , பாஜக நிர்வாகி மற்றும் நடிகை நடிகையுமான குஷ்பூ டெல்லியில் உள்ள தமிழர்கள் வசிக்கும் பகுதியான ஜல் விஹார் மற்றும் ஆர்.கே புறம் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
image

அந்த பகுதி மக்களிடம் ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் செய்த ஊழல் குறித்து மக்களிடம் உரையாற்றினார். மேலும் அப்பகுதி மக்களிடம் செல்பி எடுத்து கொண்டார். ஏராளமான பெண்களும் குஷ்புடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, ’டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு, சாராயத்தில் இலவசத்தை கொடுப்பதில் மும்மரமாக இருக்கிறது . மேலும் மாநிலத்திற்கான வளர்ச்சி திட்டத்தில் ஒன்றுமில்லை. இதை தவிர அவர்கள் செய்த ஊழலும் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது என தெரிவித்துள்ளர்.
இதையும் படியுங்கள் – 2022 ஆண்டில் அதிகரித்த நிலநடுக்கங்கள்.!. மெகா நிலநடுக்கத்துக்கான அறிகுறியா? Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.