பீமா கோரேகான் வழக்கு..அனைவரையும் விடுதலை செய்க..திருமாவளவன் கோரிக்கை.!

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள பீமா ஆற்றாங்கரையில் அமைந்த கோரேகான் பீமா எனும் இடத்தில் கிழக்கிந்திய படையினருக்கும், மராத்திய படைகளுக்கும் கடந்த 1818ம் ஆண்டு போர் நடைபெற்றது. கிழக்கிந்திய கம்பெனி படையில் பெரும்பாலும் தலித்களும், மராத்திய பேஷ்வா படைகளில் ஆதிக்க சாதிகளும் இருந்தன. இந்த போரில் தலித்களின் உதவியால் ஆங்கிலேய படை வென்றது. இதையடுத்து அங்கு நிணைவுத் தூண் எழுப்பப்பட்டது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1ம் தேதி தலித்கள் கூடுவது வழக்கம்.

அப்படி கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி, கிழக்கிந்திய கம்பெனி மற்றும் மராட்டியர்களுக்கு இடையிலான போரின் 200-வது ஆண்டு நினைவு நிகழ்ச்சி நடந்தபோது, பீமா கோரேகானில் உள்ள நிணைவுத்தூண் அருகே ஆயிரக்கணக்கான தலித்துகள் கூடியிருந்தனர். அப்போது தலித்துகளுக்கும், ஆதிக்க சாதிகளுக்கும் இடையே பெரிய அளவில் வன்முறை வெடித்தது. அப்போது ஏற்பட்ட கலவரம் மற்றும் கல்வீச்சில் பல வாகனங்கள் உடைக்கப்பட்டன. வன்முறையில் ஒருவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்திற்கு ஒருநாள் முன்னதாக, 2017ம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சனிவர் வாடாவில் ‘எல்கார் பரிஷத்’ நடத்தப்பட்டது. இதில் பிரகாஷ் அம்பேத்கர், ஜிக்னேஷ் மேவானி, உமர் காலித், சோனி சோரி, பி.ஜி. கோல்சே பாட்டீல் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், பீமா கோரேகான் வன்முறைக்கு இந்தக் கூட்டத்திற்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி, ஆனந்த் டெல்டும்ப்டே, கௌதம் நவ்லகா, கவிஞர் வரவர ராவ், ஸ்டான் சுவாமி, சுதா பரத்வாஜ், வெர்னோன் கன்சால்வஸ் உள்ளிட்ட 16 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் 2020ல் பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் ஆனந்த் டெல்டும்டே கைது செய்யப்பட்டார்.

இவருக்கு கடந்த 18ம் தேதி மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனை எதிர்த்து என்ஐஏ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு, இன்று விசாரணைக்கு வந்தது.

என்ஐஏ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஐஸ்வர்யா பதி, மாவோயிஸ்ட் அமைப்புடன் டெல்டும்டே தொடர்பில் இருப்பதற்கான ஆதாரங்களை முன்வைத்தார். ஆனந்த் டெல்டும்டே தரப்பில் ஆஜராகி இருந்த மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், இந்த குற்றச்சாட்டை மறுத்து இவ்வாறு கைப்பற்றப்பட்ட ஆதாரங்கள் ஆனந்த் டெல்டும்டேவிடமிருந்து கைப்பற்றப்படவில்லை என்று விளக்கமளித்தார்.

போலீசாரால் நூதன முறையில் கடத்தப்பட்ட 1250 லிட்டர் புதுச்சேரி சாராயம் பறிமுதல்

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி, “பயங்கரவாத தடை சட்டத்தை ஆனந்த் டெல்டும்டே மீது போடும் அளவுக்கு அவர் மீதான குற்றச்சாட்டுகள் என்ன?. மெட்ராஸ் ஐஐடியில் அவர் தலித்துகளை அணிதிரட்டுகிறார் என்று கூறுவதை ஏற்கமுடியாது. பயங்கரவாத தடை சட்டத்தை போடுவதற்கு தலித் அணிதிரட்டல்தான் காரணமா?” என்றும் கேள்வியெழுப்பினார். இந்த விவாதங்களின் இறுதியாக மும்பை உயர்நீதிமன்றத்தின் உத்தரவில் தலையிட விரும்பவில்லை என்று கூறி, என்ஐஏவின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்தநிலையில் ஆனந்த் டெல்டும்டே ஜாமினில் விடுவக்கப்பட்டதை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வரவேற்றுள்ளார். இது குறித்தூ அவர் கூறும்போது, ‘‘பீமா கோரேகான் வழக்கில் சிறைபட்டிருந்த பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே இன்று பிணையில் விடுதலை. உச்சநீதிமன்றம் என்.ஐ.ஏ தடுப்பு மனுவைத் தள்ளுபடி செய்தது. இது ஆறுதலும் நம்பிக்கையும் அளிக்கிறது. இப்பொய் வழக்கில் சிறைப்பட்டுள்ள பிறரையும் உச்சநீதிமன்றம் பிணையில் விடுதலை செய்ய வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.