மத்திய நிதியமைச்சர் தலைமையில் நடைபெற்ற மத்திய பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில் பேசியது என்ன? பிடிஆர் பழனிவேல் ராஜ்ன்..

டெல்லி: மத்திய நிதியமைச்சர் தலைமையில் நடைபெற்ற மத்திய பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் கலந்து கொண்டு  தமிழகத்தின் தேவைகள் குறித்து பேசினார். அதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் விளக்கினார்.

மத்திய நிதி அமைச்சர் தலைமையில், தலைநகர் டெல்லியில் இன்று மத்திய பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் கலந்துகொண்டனர்., “தமிழகத்தின் சார்பில்  தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒவ்வொரு மாநிலங்கள் சார்பாகவும், பல்வேறு கோரிக்கைகளும், நிதி ஒதுக்கீடுகளும் தேவை என கோரப்பட்டது.

இந்தக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், “கட்சிகளுக்கு அப்பாற்பட்டு தென்னிந்தியா, வடஇந்தியா என்ற வித்தியாசத்திற்கு அப்பாற்பட்டு கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களும், மாநிலங்களின் நிதி உரிமைகள் குறைந்துகொண்டே வருகிறது. இதனை சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது என்றார்.

மேலும், மத்திய அரசு நிதியளிக்கும் திட்டங்கள், நிதி விகிதாச்சாரம், உள்பட பல வகையினங்கள் குறித்து எடுத்துக்கூறப்பட்டது. மாநிலத்தின் நிதி ஆதாரங்களையும், அதிகாரத்தையும் திரும்ப நிலைநாட்ட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

உலகளவில் பொருளாதார நெருக்கடி வரவிருக்கின்ற சூழ்நிலையில், மாநிலத்தின் கடன் எல்லைகளையும், ஜிஎஸ்டி நிவாரணத் தொகையையும் உதவிடும் வகையில் நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதாவது, ஜிஎஸ்டி நிவாரணத்தை இரண்டு ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன என தெரிவித்தார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, 15-வது நிதிக்குழுவில் தமிழகத்துக்கு வரவேண்டிய ரூ.2200 கோடி மானியம் இன்னும் அளிக்கப்படவில்லை. அதேபோல், சென்னையில் வெள்ள பாதிப்புகளைக் குறைப்பதற்காக ரூ.500 கோடி பரிந்துரை செய்யப்பட்டது. அதுவும் வரவில்லை. எனவே, அவற்றை வழங்க வேண்டும். அதுபோல் பிஎல்ஐ திட்டம், தோல் மற்றும் தோல் இல்லா காலணிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையினை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றார்

சென்னை மெட்ரோ ரயிலுக்கான நிதி குறித்தும் தமிழகஅரசின் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதுவரை மாநில அரசு மட்டும் முதலீடு செய்து மாநில அரசின் திட்டமாகத்தான் மெட்ரோ ரயில் திட்டம் நடத்தி வரப்பட்டுள்ளது. அதனால், மத்திய அரசு தரவேண்டிய 50 சதவீத முதலீடுகளை உடனே வழங்க கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. மேலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரயில் திட்டங்களை விரைந்து முடிக்க வலியுறுத்தியதுடன்,  மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை உடனடியாக கட்டி முடிக்க வேண்டும். திருப்பூரில் உள்ள நிறுவனங்களுக்கு கூடுதல் கடன் வசதிகள் அளிக்க வேண்டும். இறக்குமதி வரியைக் குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டுள்ள என கூபறினார்.

மேலும், தமிழகத்துக்கான ஜி்எஸ்டி இழப்பீட்டுத் தொகையான ரூ.11,185.82 கோடியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். மத்திய அரசின் பங்களிப்போடு செயல்படுத்தப் படும் திட்டங்களுக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளதால், மாநில அரசுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது என்றவர்,  இந்த இடைவெளியை களைய வேண்டும். இரு அரசுகளும் தலா 49% பங்களிப்பை அளிக்க வேண்டும். சென்னை மெட்ரோ 2ம் கட்ட பணியை இரு தரப்பும் 50-50 என்ற பஙகளிப்பின் அடிப்படையிலான ஒப்புதல் அளித்து, உரிய நிதியை வரும் 2023-2024 பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். தமிழகத்துக்கு உரிய ரெயில்வே திட்டங்களை வழங்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.