2021 கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்று (25) வெளியிடப்பட்டுள்ளது.
www.results.exams.gov.lk அல்லது www.doenets.lk/examresults இணையத்தளத்திற்குள் பிரவேசித்து பெறுபேறுகளை அறிந்துகொள்ள முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
2021 கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை, கடந்த மே மாதம் 23 ஆம் திகதியிலிருந்து ஜூன் மாதம் முதலாம் திகதி வரை இடம்பெற்றது.