பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆனந்த் டெல்டும்டே ஜாமீனில் இன்று விடுதலை…

பீமா கோரேகான் வழக்கில் சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டேவுக்கு உச்சநீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியதை அடுத்து இன்று அவர் சிறையில் இருந்து விடுதலை ஆனார்.

முன்னதாக டெல்டும்டேவுக்கு மும்பை உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனுக்கு இடைக்கால தடை கோரி என்ஐஏ தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஆன்ந்த் டெல்டும்டே மற்றும் அவரது மனைவி ரமா டெல்டும்டே

கிழக்கிந்திய கம்பெனி மற்றும் மராட்டியர்களுக்கு இடையிலான போரின் 200-வது ஆண்டு நினைவு நிகழ்ச்சி 2018 ஜனவரி 1 ஆம் தேதி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்காக ஆயிரக்கணக்கான பட்டியலினத்தவர் பீமா கோரேகானில் கூடியிருந்தனர். அப்போது ஏற்பட்ட கல்வீச்சு சம்பவம் வன்முறையாக வெடித்து இனக்கலவரத்தில் முடிந்தது இந்தக் கலவரத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு அமைப்பு எம்.ஐ.ஏ.-வுக்கு மாற்றப்பட்டதை அடுத்து 2020ல் எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான ஆனந்த் டெல்டும்டே கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த நவம்பர் 17 ஆம் தேதி மும்பை உயர் நீதிமன்றம் ஆன்ந்த் டெல்டும்டேவுக்கு ஜாமீன் வழங்கியது.

தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தில் உறுப்பினராக இருந்தார் என்றும் அதற்கு ஆதரவாக செயல்பட்டார் என்றும் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் சதித்திட்டம் தீட்டியதாகவோ, தீவிரவாத செயலிலோ, சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவோ இவர் மீது குற்றம் எதுவும் சாட்டப்படவில்லை.

மேலும், அவர் இரண்டு ஆண்டுகள் ஏற்கெனவே சிறையில் இருந்துவிட்டார். இந்த வழக்கில் குற்றம் நிரூபணம் ஆனாலே 10 ஆண்டுகள் தான் சிறைத் தண்டனை கிடைத்திருக்கும் என்று கூறி மும்பை உயர்நீதிமன்றம் கடந்த வாரம் ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில், ஜாமீன் வழங்க இடைக்கால தடை விதிக்கக்கோரி என்.ஐ.ஏ. தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.