உடல் எடையை சட்டென குறைக்கும் ஜப்பானிய உடற்பயிற்சி! தினமும் 5 நிமிடங்கள் இதை செய்தாலே போதுமாம்


இன்றைய காலத்தில் பலருக்கு பெரும் தலையிடியாக உள்ள பிரச்சினை தான் உடல் எடை.

அதிலும் பலர் வயிற்று பகுதியில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பை குறைக்க போராடி வருகின்றனர்.

வயிற்றுப் பகுதியில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பைக் குறைக்க ஏராளமான பயிற்சிகள் உள்ளது. அதில் ஒன்று தான் ஜப்பானிய ‘டவல் உடற்பயிற்சி.

இது ஜப்பானின் புகழ்பெற்ற மசாஜ் நிபுணரான மருத்துவர் தோஷிகி புகுட்சுட்ஸியால் இந்தப் பயிற்சி அறிமுகம் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.

இது உடல் எடையைக் குறைப்பதுடன் பல ஆரோக்கிய பலன்களையும் அள்ளித்தருகின்றது. தற்போது இந்த பயிற்சியை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.  

உடல் எடையை சட்டென குறைக்கும் ஜப்பானிய உடற்பயிற்சி! தினமும் 5 நிமிடங்கள் இதை செய்தாலே போதுமாம் | Japanese Exercise To Help You Lose Weight

image – pinterest

செய்முறை

  •  கை, கால்களை நன்றாக நீட்டி தளர்த்திய நிலையில், தரையில் விரிக்கப்பட்ட பாயின் மேல், மேற்கூரையைப் பார்த்தவாறு படுத்துக்கொள்ளுங்கள்.
  • தொப்புளுக்கு நேர் கீழே, முதுகுக்கு அடியில், ஒரு டவலை நன்றாக சுருட்டி வைத்துக்கொள்ளுங்கள்.
  • கால்கள் இரண்டையும் 10 செ.மீ. இடைவெளியில் நகர்த்தி, தோள்பட்டை தரையில் படுமாறு வைத்திருங்கள்.
  • கைகளை தலைக்கு மேலே தூக்கி, உள்ளங்கைகள் தரையைப் பார்த்தவாறு இருப்பதுபோல் செய்யுங்கள்.
  • இந்த நிலையில் குறைந்தது 5 நிமிடங்களாவது இருக்க வேண்டும். பிறகு உடலை மெதுவாகத் தளர்த்தி, இயல்பு நிலைக்கு வரவும்.
  •  முறைப்படி தொடர்ந்து பயிற்சி செய்தால், விரைவாக உடல் எடை குறையும்

பலன்கள்

  • முதுகு வலியில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது .
  • இந்த உடற்பயிற்சியைத் தொடர்ந்து செய்வதன் மூலம் இடுப்பைச் சுற்றி இருக்கும் அதிகப்படியான சதை மற்றும் உடல் எடை குறையும். 
  • இந்த டவல் உடற்பயிற்சியினைத் தினமும் செய்தால் சரியான உடலமைப்பைப் பெற முடியும்.

முக்கிய குறிப்பு

  • உடல் எடையைக் குறைக்க உடற்பயிற்சி மட்டுமின்றி, உணவிலும் மாற்றங்களைச் செய்ய வேண்டும்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.