”குலசையில் புதிய ஏவுதளம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் தொடக்கம்”- இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத்

குலசேகர பட்டினத்தில் ஏவுதளம் அமைப்பதற்கான முதல் கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், நில அளவு, தண்ணீர் சுற்றுச்சூழல், ராக்கெட் ஏவுதளம் முதலிய அடிப்படை வசதி போன்றவற்றை ஆய்வு மேற்கொண்டு வருவதாக இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் தெரிவித்துள்ளார்.
ஒரு புவி நோக்கு செயற்கைக்கோள் மற்றும் 8 நானோ செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி வரிசையின் 56ஆவது ராக்கெட்டான PSLV C54 ராக்கெட் ஏந்திச் சென்றது. அந்த சோதனை முயற்சி வெற்றிபெற்றதை அடுத்து, தொடர்ச்சியாக அடுத்தடுத்த ராக்கெட்டுகளை அனுப்பும் முயற்சியில் வேகம் காட்ட  முடிவெடுத்துள்ளது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம். அதற்கு ஏதுவாக குலசேகர பட்டினத்தில் புதிய ஏவுதளம் அமைப்பதற்கான ஏற்பாடுகளையும் தொடங்கியுள்ளது.
image
PSLV C54 ராக்கெட்டில் அனுப்பப்பட்ட புவிநோக்கு செயற்கைக்கோளானது, கடலின் மேற்பரப்பில் ஏற்படும் வெப்ப மாறுபாடு மற்றும் கடற்பரப்பில் ஏற்படும் வேறுபாடுகளை கண்டறிய இந்த செயற்கைக்கோள் உதவிகரமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றும் 8 நானோ செயற்கைக்கோள்களானது தொலை உணர்வு செயற்கைக்கோள்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
image
PSLV C54 ராக்கெட் திட்டமிட்ட படி வெற்றி அடைந்ததை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ இயக்குனர் சோம்நாத், ”திட்டமிட்டபடி அனைத்து செயற்கை கோள்களும் நிலைநிறுத்தப்பட்டு சரியான திசைவேகத்தில் ராக்கெட் சென்றது. சூரிய தகடுகள் சரியான முறையில் செயல்பட்டன, இந்த வெற்றி ஏவுகணையை தொடர்ந்து pslvயின் அடுத்த தொடர் ராக்கெட் வெளிவரும்.
மேலும் ஆதித்யா செயற்கைக்கோள் அடுத்த வருடம் ஏவப்பட உள்ளது, அதன் தொடர்ச்சியாக GSLV mk 3 அடுத்த மாதம் ஏவ திட்டமிட்டுள்ளோம். நேபாளம், பூட்டான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி மேற்கொள்ள உள்ளோம். மற்றும் சுகன்யான் குறித்த விரிவான ஆய்வு நடைபெற்றுவருகிறது, அதனை 2023ல் விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளோம்.
image
அனைத்து தொழில்நுட்பம், பயிற்சி, விண்வெளி ஆராய்ச்சி போன்றவை அண்டை நாடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்த மூலம் பகிர்ந்து அளிக்கப்படும்.
image
குலசேகர பட்டினத்தில் ஏவுதளம் அமைப்பதற்கான முதல் கட்டப் பணிகள் தொடங்கியுள்ளது. நில அளவு, தண்ணீர் சுற்றுச்சூழல் அடிப்படை வசதி போன்றவற்றை ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். மற்றும் விரைவில் குலசேகரபட்டினம் ஏவுதளம் அமைப்பதற்கான திட்ட வரையறை வெளியிடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.