கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடத்தில் குளிக்கச் சென்ற 17 வயது சிறுவனை முதலை இழுத்து சென்ற நிலையில், சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடத்தில் குளிக்கச் சென்ற திருமலை என்ற 17 வயது சிறுவனை ராட்சத முதலை இழுத்து சென்றது. இந்நிலையில், தகவல் தெரிந்த கிராம மக்கள் அங்கு ஒன்று திரண்டு சிறுவனை மீட்க வழிதெறியாமல் கதறி அழுதனர்.
பின்னர் இது குறித்து தீயணைப்பு துறைக்கும் காவல் துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறை, காவல் துறை மற்றும் வனத்துறை என அனைத்து துறையினரும் உடனடியாக வந்து, முதலை இழுத்துச் சென்ற திருமலையை தேடினர். பலமணநேர போராட்டத்திற்கு பிறகு மாணவன் உடல் மீட்கப்பட்டது.
குளிக்கச்சென்ற மாணவன் உயிரிழந்ததையடுத்து, கிராம மக்களும் திருமலை உறவுகளும் ஒன்று திரண்டு கதறி அழும் காட்சி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
