சென்னை: காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு எதிராக புகார் தெரிவிக்க காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 11 பேர் நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் கடந்த 15-ம் தேதி நடந்த மோதலுக்கு மாநில பொருளாளர் ரூபி மனோகரன், மாநில எஸ்.சி. அணி தலைவர் ரஞ்சன்குமார் ஆகியோர் காரணம் என புகார் கூறப்பட்டது. இதுதொடர்பான ஒழுங்கு நடவடிக்கை குழு முன்பு ஆஜரான ரஞ்சன்குமார், இந்த மோதலில் செல்வப்பெருந்தகைக்கு பங்கு இருப்பதாக குற்றம்சாட்டினார்.
இது ஒருபுறமிருக்க, செல்வப்பெருந்தகைக்கு எதிராக பிரின்ஸ், ராஜேஷ்குமார், பழனி நாடார்உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அவர்கள் அனைவரும் நேற்று டெல்லிபுறப்பட்டு சென்றுள்ளனர். அங்கு கட்சித் தலைவர்மல்லிகார்ஜுன கார்கேவையும், அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலையும் சந்தித்து, செல்வப் பெருந்தகை மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்த திட்டமிட்டுள்ளனர்.