சபரிமலை, சபரிமலையில் ஒரு எலுமிச்சம் பழத்தில் ஐந்து ஜூஸ் தயாரித்து விற்ற கடைக்காரருக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசன் நடந்து வருகிறது. இங்கு, பொருட்களின் விலை, எடை போன்றவற்றை நிர்ணயித்து போர்டு வைக்க வேண்டும் என பத்தணந்திட்டை கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதை மீறுவர்கள் குறித்து, உதவி எண் மற்றும் ‘இ – மெயில்’ வாயிலாக பக்தர்கள் புகார் செய்ய முடியும். மேலும் வருவாய், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் அடிக்கடி சோதனை நடத்துகின்றனர்.
பாண்டித்தாவளம் அருகே உள்ள ஒரு ஜூஸ் கடையில் ஒரு எலுமிச்சம் பழத்தில் ஐந்து ஜூஸ் தயாரித்து விற்றதைப் பார்த்த அதிகாரிகள், அந்த கடைக்காரருக்கு 5,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.
நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் பணம் வாங்கிய பாத்திரக்கடை, ஹோட்டல் போன்றவற்றுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement