துப்பாக்கி சூட்டில் 6 பேர் பலி: மேகாலயாவில் இணைய சேவை துண்டிப்பு

ஷில்லாங்: துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலியானதால் மேகாலயாவில் இன்று முதல் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. அசாம் – மேகாலயா எல்லையில் கடந்த செவ்வாய்க் கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால் போலீஸ் சோதனை சாவடி, மூன்று போலீஸ் வாகனம் வன்முறையாளர்களால் தீவைத்து எரிக்கப்பட்டன. போலீசார் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் சென்றதால், தற்போது இருமாநில எல்லையிலும் பதற்றம் அதிகரித்துள்ளது.

அதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக மேகாலயாவின் ஏழு மாவட்டங்களில் இணைய வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மாநில காவல்துறையின் கூற்றுப்படி, வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டர், யூடியூப் போன்ற சமூக ஊடக தளங்கள் மூலம் வன்முறை பரவ வாய்ப்புள்ளதால், இணைய சேவை முடக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த முடக்கம் இன்று காலை 10.30 மணி முதல் அடுத்த 24 மணி நேரத்திற்கு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.