திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு அருகே வெம்பாக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது பெண். அங்கிருக்கும் ஒரு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். பைரவபுரம் கிராமத்தில் வசித்து வரும் பிரசன்னா(19) என்பவர் பாலிடெக்னிக் கல்லூரில் 3ம் வருடம் படித்து வந்துள்ளார்.
இவர்கள் இருவரும் பேருந்தில் பள்ளி, கல்லூரிக்கு ஒன்றாக பயணித்து வந்துள்ளனர். அப்பொழுது சிறுமிக்கும், பிரசன்னாவுக்கும் இடையில் காதல் ஏற்பட்டு இருக்கின்றது. மாணவியை பிரசன்னா அடிக்கடி தன்னுடைய வீட்டிற்கு அழைத்து செல்லும் வழக்கத்தை கொண்டுள்ளார்.
அப்போது சிறுமியிடம் ஆசையாக பேசி பாலியல் பலாத்காரம் செய்து இருக்கின்றார். இந்த நிலையில் சிறுமிக்கு உடல் நிலை சரியில்லாமல் சென்றுள்ளது. எனவே, அவரை பரிசோதித்தபோது மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.
இது பற்றி செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் பிரசன்னா மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.