தற்போது இளம் வயதிலேயே பலருக்கும் மாரடைப்பு ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. உணவு முறை மாற்றத்தில் இருந்து பல்வேறு காரணங்கள் மாரடைப்பு மரணங்களுக்கு பின்னணியாக உள்ளன.
அந்த வகையில், கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் அருகே 23 வயதே ஆன இளம்பெண் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் குந்தபுரா மாவட்டத்தின் பஸ்ரூர் பகுதியை சேர்ந்தவர் ஜோஸ்னா லீவிஸ் (23). இவர் கடந்த நவ. 23ஆம் தேதி, உடுப்பி மாவட்டத்தில் நடைபெற்ற தனது உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்துகொண்டுள்ளார்.
அப்போது, மணப்பெண் வரவேற்பின்போது, நடனமாடி வந்த ஜோஸ்னா இடையிலேயே மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக, ஜோஸ்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில், குறைந்த ரத்த அழுத்தத்தால் அவர் மயக்கம் போட்டிருக்கலாம் என கூறப்பட்டது. ஆனால், துரதிருஷ்டவசமாக அவர் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். அவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
23 வயது இளம்பெண்ணுக்கு மாரடைப்பு… சோகத்தில் முடிந்த திருமணம் #Karnataka | #ViralVideo pic.twitter.com/Gfj1DHgdeV
— NG Sudharsan07 (@NgSudharsan07) November 26, 2022
கடந்த வியாழக்கிழமை (நவ. 24) காலையில், ஜோஸ்னா உயிரிழந்துள்ளார். திருமண நிகழ்ச்சியின்போது, நடனமாடிக்கொண்டே வந்த ஜோஸ்னா, திடீரென மயங்கிவிழுவதை அங்கிருந்தவர் வீடியோவாக பதிவுசெய்துள்ளனர். தற்போது, அந்த வீடியோக்கள் அதிகமாக பரவி வருகிறது.
23 வயதே ஆன இளம்பெண் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அவர் திருமண நிகழ்ச்சியில் நடனமாடிக்கொண்டிருந்த போதே திடீரென மயங்கி விழும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. pic.twitter.com/40k53DaYCf
— NG Sudharsan07 (@NgSudharsan07) November 26, 2022
வைரலான வீடியோவைக் கண்டு பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏனென்றால், 23 வயதே ஆன இளம்பெண் ஒருவர் மாரடைப்பால் மரணமடைவது என்பது எளிதான விஷயம் அன்று என பலரும் நினைக்கின்றனர். அடுத்த நொடி நிச்சயமற்ற வாழ்வு என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் 24 வயதான வங்காள நடிகை ஐந்த்ரிலா சர்மா, மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததும் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது நினைவுக்கூரத்தக்கது.