இலவச பேருந்து: ஒவ்வொரு மாதமும் தமிழக பெண்கள் சராசரியாக எவ்வளவு சேமிக்கிறார்கள் தெரியுமா?

தமிழ்நாட்டில் பெண்கள் மேம்பாட்டிற்காக உள்ளூர் அரசு பேருந்துகளில் இலவச பயணம் செய்யும் வசதியை திமுக அரசு பொறுப்பேற்றவுடன் அறிவித்தது. இந்தத் திட்டத்தின் பலன் எந்த அளவுக்கு பெண்களை சென்று அடைந்திருக்கிறது என்பதனை ஆய்வு செய்யும் வகையில் நாகப்பட்டினம், மதுரை, திருப்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களிலும், கூடுதலாக சென்னையிலும் தமிழ்நாடு திட்டக்குழு சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதில் நாகப்பட்டினத்தில் 416 பெண்களிடமும், மதுரையில் 422 பெண்களிடமும், திருப்பூரில் 437 பெண்களிடமும் தகவல் பெறப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதன் அறிக்கை முதலமைச்சரிடம் சமீபத்தில் சமர்பிக்கப்பட்டது. அந்த ஆய்வு, வெவ்வேறு வகையான பணிகளுக்கு செல்லும் பெண்களிடம் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் நாகப்பட்டினம் –  மதுரை – திருப்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிங்க் நிறத்தில் மாறும் பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்துகள்! | Pink paints  coated for women Free buses in Tamilnadu | Puthiyathalaimurai - Tamil News  | Latest Tamil News | Tamil News Online ...
ஆய்வு முடிவில் தெரியவந்தவை:

மகளிர் இலவச பேருந்து பயணத்திட்டம் மூலம் பயணிக்கக் கூடிய பெண்களில் 48% பெண்கள், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 52% பெண்கள் 40 வயதிற்கு உட்பட்டவர்கள்.

40% பெண்கள், குடும்பத்தாரை சார்ந்து இல்லாமல் சுயமாக வேலைக்கு சென்று திரும்ப மகிளிர் இலவச பேருந்து பயண திட்டம் உதவியாக உள்ளது.

பணிக்கச் செல்லும் பெண்கள் இலவச பேருந்து பயணம் திட்டம் மூலம் சராசரியாக ஒரு மாதத்திற்கு 888 ரூபாய் சேமிக்க முடிகிறது.

image

பல்வேறு வகையான பணிக்கு செல்லக்கூடிய பெண்கள் மாதம் 756 ரூபாயிலிருந்து 1012 ரூபாய் வரையிலும் சேமிக்க முடிகிறது.

சென்னையில் பிராட்வே – கண்ணகி நகர், கோயம்பேடு –  திருவொற்றியூர், தாம்பரம் – செங்கல்பட்டு ஆகிய வழித்தடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்தில்  பெண்கள் மாதத்திற்கு 50 முறை மாநகரப் பேருந்தில் பயணிக்கின்றனர்.  இதன் மூலம் சராசரியாக மாதம் 858 ரூபாய் சேமிக்கின்றனர்.

மகளிர் இலவச பேருந்து பயணத்திட்டத்தை பயன்படுத்தக்கூடிய பெண்களின் மாத சம்பளம் சராசரியாக மாதம் 12,000 த்துக்கு உள்ளாக இருக்கிறது.

image

இந்தத் திட்டத்தின் மூலம் சேமிக்க கூடிய தொகையினை குடும்பத்தின் அத்தியாவசிய தேவைக்கு பெண்கள் பயன்படுத்துகின்றனர்.

இலவச பேருந்துகள் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக பயணிகள் உணர்கின்றனர். இதன் காரணமாக பணம் செலுத்தி பயணிக்க கூடிய மற்றும் வேகமாக செல்லும் மாற்று போக்குவரத்தை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு பெண்கள் தள்ளப்படுவதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.