சென்னை அருகே வண்டலூரில் கேளம்பாக்கம் சாலை மேல கோட்டையூர் பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்த கல்லூரியில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த புத்தாலா ஓம்கிரீஸ் எனும் இளைஞர் மூன்றாம் ஆண்டு பி டெக் படித்து வந்துள்ளார்.
இவர் தேர்வு எழுதிக் கொண்டிருந்த நேரத்தில் பாதியிலேயே தேர்வறையில் இருந்து வெளியேறி கல்லூரி வளாகத்தின் ஆறாவது மாடியில் இருந்து குதித்துள்ளார். இதன் காரணமாக புத்தாலா ஓம்கிரீஸ் பலத்த காயமடைந்துள்ளார். உடனடியாக அவரை மீட்ட கல்லூரி நிர்வாகம் மருத்துவமனையில் அனுமதித்தது.
ஆனால், தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி அந்த மாணவன் உயிரிழந்து விட்டார். அவரது இறப்பை ஏற்றுக் கொள்ள முடியாத பெற்றோர் கல்லூரி நிர்வாகத்திடம் விசாரணை நடத்த வேண்டும் என்று போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? பாடப்பிரிவில் தோல்வியடைந்ததாலா? அல்லது வேறு ஏதாவது விரக்தியா? காதல் விவகாரமா என்று பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி வளாகத்திலேயே மாணவன் தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.