
சென்னையை அடுத்த ஆதம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி விளையாட்டு திடலில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.58.00 இலட்சம் மதிப்பீட்டில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகளைத் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தென் சென்னை திமுக எம்.பி. தமிழச்சி தங்க பாண்டியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “மருத்துவமனையிலிருந்து ஒரு பெண் வந்ததை கூடவா மருத்துவர்களின் அலட்சியம் என்பது. மருத்துவத் துறையின் கட்டமைப்பைக் கேள்விக்குறியாக்க வேண்டும் என்பது போல் உள்ளது. மருத்து தட்டுப்பாடு என ஆளுநரிடம் எடப்பாடி பழனிச்சாமி மனு தந்து உள்ளார். சேலத்தில் மருந்து தட்டுப்பாடு எனக் கூறி 4 மணி நேரத்தில் சென்று ஆய்வு செய்தேன். தமிழகத்தில் 32 மருந்து சேமிப்பு கிடங்கு உள்ளது. எந்த கிடங்கிற்கு வேண்டுமானாலும் எந்த கட்சி அரசியல் தலைவரும் சென்று இருப்பு அறிக்கையை ஆய்வு செய்யலாம்.
பொது மக்களுக்கு எந்த மருந்து தட்டுப்பாடு இருந்தாலும் 104க்கு போன் செய்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும். இப்படி வெளிப்படைத் தன்மையுடன் நிர்வாகம் நடத்தும் போது 3 மணிக்கு பெண் மருத்துவ மனையிலிருந்து வெளியேறிச் சென்று தண்டவாளத்தில் அடிப்பட்டதற்கு மருத்துவர்கள் தள்ளி விட்டதை போல் தோன்றதை உருவாக்குவது மருத்துவ சேவையைக் கேவலப்படுத்துவது போல் இருக்கிறது” என்று கூறினார்.