விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர் சஞ்சீவ் – ஆல்யா மானசா ஜோடி. சீரியலில் ரீல் ஜோடியாக நடித்து பின்னர் ரியல் ஜோடியாக மாறினார்கள். திருமணத்துக்குப் பிறகு கர்ப்பமான ஆல்யா நடிப்புக்கு பிரேக் எடுத்துக்கொண்டார். ஆனால் சஞ்சீவ் தொடர்ந்து சீரியலில் நடித்து வந்தார். அதன்பிறகு ஆல்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனால் உடல் எடை கூடிய அவர், சட்டென எடையை குறைத்து மீண்டும் விஜய் டிவியில் ராஜா ராணி சீரியலின் இரண்டாம் பாகத்தில் கமிட் ஆனார். அடுத்த சில மாதங்களில் இரண்டாவதாக கர்ப்பமான ஆல்யா தொடர்ந்து சீரியலில் நடித்து வந்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இரண்டாவது குழந்தைக்கு பிறகு ஆல்யா மானசா உடல் எடை கூடி இருக்கிறார். இவர் சீரியலில் நடிக்கவில்லை என்றாலும், இவர்கள் தனியாக தொடங்கி இருக்கும் யூடுயூப் சேனலில் அடிக்கடி தொடங்கி பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் ஆல்யா ரசிகர்களுடன் தொடர்பில் தான் இருக்கிறார். சமீபத்தில் ஆல்யா சீரியலில் ரீ-என்ட்ரி கொடுக்க இருப்பதாக கூறி இருந்தார்.
இதற்கிடையில் தற்போது கடந்த சில மாதங்களுக்கு முன்பே தான் புதிய தொடரில் கமிட்டாகி இருப்பதாக தெரிவித்து இருந்தார், அந்தவகையில் இவர் தற்போது நடிக்க உள்ள சீரியலின் பெயர் இனியா ஆகும். மேலும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள சரிகம புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய தொடரில் தான் நடிக்கிறாராம். இந்த அறிவிப்பால் அவரது ரசிகர்கள் பலரும் உற்சாகத்தில் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். அத்துடன் விரைவில் இந்த சீரியல் ஒளிபரப்பாகும் என ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.