மோடி அரசு: ரேஷன் கார்டுதாரர்களுக்கு மத்திய அரசு ஒரு பெரிய செய்தியை வழங்கியுள்ளது. அதன்படி, ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் இலவச ரேஷன் வசதியை அளித்து வருகின்றன, ஆனால் விநியோகஸ்தர் எடையை விட குறைவாக வழங்குகிறார் என்றால், இப்போது நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. அந்தவகையில் இனி ரேஷன் கடையில் டீலர்கள் எடைக்கு குறைவான ரேஷன் பொருட்களை வழங்கினால், உடனடியாக உங்கள் மாநிலத்தின் இலவச எண்ணில் புகார் செய்யலாம். ஆம், அதற்காக இலவச ஹெல்ப்லைனை மத்திய அரசு தொடங்கியுள்ளது. அதன் முழு விவரத்தை இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.
இலவச அரிசி – கோதுமை
இந்த ஹெல்ப்லைன் எண்கள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும். எனவே உங்கள் மாநில எண்ணை உங்களின் தொலைபேசியில் நீங்கள் சேவ் செய்துக் கொள்ளலாம். இதற்கிடையில் தற்போது ரேஷன் கார்டு மூலம் மக்களுக்கு இலவச கோதுமை மற்றும் அரிசியை அரசு வழங்கி வருகிறது. முன்னதாக, இதில் உப்பு மற்றும் சர்க்கரையும் இலவசமாக விநியோகிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் 2022 வரை இலவச ரேஷன் கிடைக்கும்
இலவச ரேஷன் வசதி டிசம்பர் 2022 வரை அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது, ஆனால் இந்த திட்டம் டிசம்பர் மாதத்திற்குப் பிறகு பொருந்துமா இல்லையா என்பது குறித்து அரசாங்கத்தால் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. முன்னதாக அரசாங்கம் இந்த திட்டத்தை ஏப்ரல் 2020 இல் கொரோனா காலத்தில் அறிமுகப்படுத்தியது, இதுவரை அரசாங்கம் இந்த திட்டத்தை பல முறை நீட்டித்துள்ளது.
மாநிலம் வாரியாக இலவச ஹெல்ப்லைன் நம்பர் வெளியிடப்பட்டுள்ளன
>> டெல்லி – 1800110841
>> பஞ்சாப் – 180030061313
>> ஹரியானா – 18001802087
>> உத்தரப் பிரதேசம்- 18001800150
>> உத்தரகாண்ட் – 18001802000, 18001804188
>> ராஜஸ்தான் – 18001806127
>> இமாச்சல பிரதேசம் – 18001808026
>> மகாராஷ்டிரா- 1800224950
>> மேற்கு வங்காளம் – 18003455505
>> மத்தியப் பிரதேசம்- 07552441675, ஹெல்ப்லைன் எண்: 1967 / 181
>> சத்தீஸ்கர்- 18002333663
>> குஜராத்- 18002335500
>> ஆந்திரப் பிரதேசம் – 18004252977
>> அருணாச்சல பிரதேசம் – 03602244290
>> கோவா- 18002330022
>> அசாம் – 18003453611
>> பீகார்- 18003456194
>> ஜார்கண்ட் – 18003456598, 1800-212-5512
>> கர்நாடகா- 18004259339
>> கேரளா- 18004251550
>> மணிப்பூர்- 18003453821
>> மேகாலயா- 18003453670
>> மிசோரம்- 1860222222789, 18003453891
>> நாகாலாந்து- 18003453704, 18003453705
>> ஒடிசா – 18003456724 / 6760
>> சிக்கிம் – 18003453236
>> தமிழ்நாடு – 18004255901
>> தெலுங்கானா – 180042500333
>> திரிபுரா- 18003453665
>> ஜம்மு – 18001807106
>> காஷ்மீர் – 18001807011
>> அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் – 18003433197
>> சண்டிகர் – 18001802068
>> தாத்ரா & நகர் ஹவேலி & டாமன் & டையூ – 18002334004
>> லட்சத்தீவு – 18004253186
>> புதுச்சேரி – 18004251082