சேலம் ஐந்து ரோடு பகுதியில் இருந்து ஜங்ஷன் செல்லும் பிரதான சாலையில் இன்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அப்பொழுது நிலை தடுமாறி முன்பு சென்ற இருசக்கர வாகனத்தை மோதி சாலையின் அமைக்கப்பட்டிருந்த தடுப்பின் மீது விழுந்தார்.
அவர் ஹெல்மெட் அணிந்து இருந்தால் நல்வாய்ப்பாக எந்த ஒரு பலத்த காயமும் ஏற்படாமல் தப்பினார். மேலும் இவர் இடித்த நபர் கீழே விழுந்து அவரும் சென்று கீழே விழுந்த இளைஞரை மீட்டு அவருக்கு முதலுதவி வழங்கி வழி அனுப்பி வைத்தனர்.
இதனால் ஐந்து ரோடு பிரதான சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஹெல்மெட் அணிந்து இருந்ததால் இளைஞர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.