2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது சாதாரண தர பரீட்சையை ,ஏப்ரல் மாத இறுதியில் அல்லது 2023 மே மாத தொடக்கத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலளார் சந்திப்பில் அமைச்சர் இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில், .
இந்த பரீட்வையை ; நடத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, பாடசாலை மாணவர்கள் மத்தியில் காணப்படுவதாக தெரிவிக்கப்படும் போதைப்பொருள் பாவனை குறித்து அமைச்சர் தெரிவிக்கையில் ,இதனை இல்லாது ஒழிப்பதற்கு விசேட வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.
விஷத்தன்மை கொண்ட போதைப்பொருட்களில் 178 வகைகள் உண்டு. இவற்றில் ஏதேனும் ஒன்றை வைத்திருந்தாலோ அல்லது பயன்படுத்தினாலோ அது தண்டைணக்குரிய குற்றமாகும். இவ்வாறான போதைப்பொருட்களில் ஐந்து கிராம் அல்லது அதற்கு கூடுதல் அளவை வைத்திருந்தால் அது மிக பாரதூரமான குற்றமாகும். இதனை கவனத்தில் கொண்டு அமைச்சு விசேட நடவடிக்கை ஒன்றையும் முன்னெடுத்துள்ளது என்றும் கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்தார்.