சேலம் மாவட்டத்தில் கணவரிடையே ஏற்பட்ட தகராறில் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டை குப்புசாமி தெரு பகுதியை சேர்ந்தவர் காய்கறி வியாபாரி ரவிக்குமார். இவரது மனைவி மணிமேகலை(31). இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
இதையடுத்து நேற்று இவர்கள் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு காரணமாக மனவேதனையில் இருந்த மணிமேகலை வாழ்க்கையில் வெறுப்படைந்து வீட்டின் அறைக்குள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து அறைக்குள் சென்று மணிமேகலை வெகு நேரம் ஆகியும் கதவு திறக்காததால் சந்தேகமடைந்த ரவிக்குமார், ஜன்னல் வழியாக பார்த்த போது மணிமேகலை தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து ரவிக்குமார் மணிமேகலை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் மணிமேகலை வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த செவ்வாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.