கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் முன்பள்ளிகளின் வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளி பாடசாலைகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் இன்று (28) வழங்கப்பட்டன.
வடக்கு பிரதேச செயலகத்தில் மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்தல் அமைச்சின் சிறுவர் செயலக அனுசரணையில் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜனாபா.A.K.ஹனாவின் ஒழுங்கமைப்பில் பிரதேச செயலாளர் .T.J.அதிசயராஜின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட 14 முன்பள்ளி பாடசாலைகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.