`கொலைசெய்துவிட்டேன் உடலை அப்புறப்படுத்த உதவுங்கள்!' – இன்ஸ்டாகிராமில் வீடியோ கால் செய்த சிறுவன் கைது

அமெரிக்காவில் 16 வயது சிறுவன் ஒருவன் கொலைசெய்துவிட்டு உடலை அப்புறப்படுத்த உதவுமாறு தெரிந்தவருக்கு இன்ஸ்டாகிராமில் வீடியோ கால் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தகைய கொடூரமான சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமையன்று, பென்சில்வேனியா நகரில் நடந்திருக்கிறது.

சிறுமியைக் கொலைசெய்த சிறுவன்

ஏற்கெனவே அறிமுகமான 16 வயது சிறுவனிடமிருந்து தன் மகளுக்கு இன்ஸ்டாகிராமில் வீடியோ கால் வந்ததாக ஒரு பெண் போலீஸுக்குப் போன் செய்திருக்கிறார். அந்த வீடியோ காலில், சிறுவன் ஒருவரைக் கொன்றுவிட்டதாகக் கூறி கொலைசெய்யப்பட்டவரின் கால்களைக் காண்பித்து, அதனை அப்புறப்படுத்த உதவிகேட்டதாக, போலீஸிடம் அந்தப் பெண் கூறியிருக்கிறார். அதைத் தொடர்ந்து போலீஸார் விசாரித்ததில், அந்த சிறுவனின் பெயர் ஜான் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) எனத் தெரியவந்திருக்கிறது. மேலும், பென்சலேமில் (Bensalem) உள்ள டாப் ஆஃப் ரிட்ஜ் டிரெய்லர் பார்க் (Top of the Ridge Trailer Park) பகுதியில் அந்தச் சிறுவன் வசிப்பதாகத் தகவல் கிடைக்க… போலீஸார் அந்த இடத்துக்கு விரைந்தனர். போலீஸார் அந்த இடத்தை சென்றடைந்தபோது, ​​ட்ரெய்லரின் பின்புறத்திலிருந்து ஒரு சிறுவன் ஓடி வருவதைக் கண்டிருக்கிறார்கள்.

சிறுமியைக் கொலைசெய்த சிறுவன் கைது!

பின்னர் உடனடியாக சம்பவம் நடந்த வீட்டை போலீஸார் ஆய்வுசெய்தபோது, குளியறையில் ஒரு சிறுமி துப்பாக்கியால் சுடப்பட்ட காயத்துடன் விழுந்துகிடப்பதை அவர்கள் பார்த்தனர். அந்த சிறுமிக்கு 13 வயது இருக்கும் எனக் கூறப்படுகிறது. அதையடுத்து சிறிதுநேரத்திலேயே ஜானைக் கண்டுபிடித்த போலீஸார், அவனைக் கைதுசெய்து சிறையிலடைத்தனர். பின்னர், குற்றவியல் கொலை, குற்றத்துக்கான கருவிகளை வைத்திருத்தல், ஆதாரங்களைச் சேதப்படுத்துதல் போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஜாமீன் மறுக்கப்பட்ட சிறுவன், சிறார் தடுப்பு மையத்துக்கு அனுப்பப்பட்டார். மேலும் இந்த வழக்கின் முதற்கட்ட விசாரணை, வரும் டிசம்பர் 7-ம் தேதி நடைபெறும் என்று கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.