இலங்கை அரசாங்கத்தின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கடந்த திங்கட்கிழமை இந்தியாவின் புலனாய்வு மற்றும் ஆராய்ச்சிக்கான முகவரமைப்பின் றோ தலைவர் சமந்த் குமார் கோயல், கொழும்பிற்கு வருகை தந்திருந்ததுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து விரிவான முறையில் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
இச்சந்திப்பின் போது ஜனாதிபதியின் சிரேஷ்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க மற்றும் இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட ஆகியோரும் இணைந்திருந்தனர்.
பாரம்பரியமாக, இந்தியாவின் வெளிப்புற புலனாய்வு முகவரமைப்பின் தலைவர் அமைச்சரவை செயலகத்தில் செயலாளராக (ஆய்வு) நியமிக்கப்பட்டு இந்தியப் பிரதமரின் அதிகாரத்தின் கீழ் இருந்து வருகிறார்.
அதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கையாளரும், மூலோபாயவாதியுமான பசில் ராஜபக்சவுடனும் உயர்மட்ட உளவுத்துறை அதிகாரி கோயல் தனியாக சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,