திருப்பதி : திருச்சானுார் பத்மாவதி தாயார் கோவிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின், 8ம் நாளான நேற்று திருத்தேரோட்டம் நடந்தது.
ஆந்திராவின் திருச்சானுார் ஸ்ரீ பத்மாவதி தாயாரின் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக, எட்டம் நாளான நேற்று திருத்தேரில் பவனி வந்து தாயார் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மலர்கள் மற்றும் வண்ண துணிகளால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். கலை நிகழ்ச்சிகள், வேத கோஷங்கள், மேள, தாளத்துடன் நடந்த தேரோட்டத்தில் பக்தர்கள் தாயாரை கற்பூர ஆரத்தி எடுத்து, தேங்காய் உடைத்து வழிபட்டனர்.
இதன்பின் மஞ்சள், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர் மற்றும் பல்வேறு வகையான பழங்களால் தாயாருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மாலையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருளி தாயார் சேவை அருளினார். பிரம்மோற்சவத்தின் நிறைவு வாகன சேவையாக குதிரை வாகன சேவை நடத்தப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement