மனைவியின் அனுமதியுடன் உக்ரைனிய பெண்களை சீண்டும் ரஷ்ய வீரர்கள்: இதுவே எதிரிகளின் மற்றொரு ஆயுதம்


உக்ரைனிய பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்வதற்கு ரஷ்ய படைகளின் மனைவிகளே ஊக்கப்படுத்துகிறார்கள் என்று உக்ரைனின் முதல் பெண்மணி ஒலேனா ஜெலென்ஸ்கா குற்றம்சாட்டியுள்ளார்.

ரஷ்ய படைகளின் மற்றொரு ஆயுதம்

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை ஒன்பது மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், ரஷ்ய படைகள் பல்வேறு போர் குற்றங்கள் மற்றும் அத்துமீறல்களில் ஈடுபட்டு வருவதாக உக்ரைன் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

இந்நிலையில் இத்தகைய போர் சூழலில் பாலியல் அத்துமீறல்களை சமாளிப்பதற்காக லண்டனில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் உக்ரைனின் முதல் பெண்மணி ஒலேனா ஜெலென்ஸ்கா கலந்து கொண்டு உரையாற்றினார்.

மனைவியின் அனுமதியுடன் உக்ரைனிய பெண்களை சீண்டும் ரஷ்ய வீரர்கள்: இதுவே எதிரிகளின் மற்றொரு ஆயுதம் | Wives Of Russian Troops Encourage To Rape WomenVolodymyr Zelenskyy & his wife Olena Zelenska-வோலோடிமிர் ஜெலென்ஸ்கி& அவரது மனைவி ஒலேனா ஜெலென்ஸ்கா(Sky News)

இந்த உரையில் “பாலியல் வன்முறை என்பது ஒருவரின் மீது ஆதிக்கத்தை நிரூபிக்க மிகவும் கொடூரமான, மிருகத்தனமான வழியாகும்.

மேலும் இதுபோன்ற வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, போர் காலங்களில் சாட்சியமளிப்பது கடினம், ஏனெனில் யாரும் பாதுகாப்பாக உணர்வது இல்லை”, என்று தெரிவித்தார்.
 

இத்தகைய போர் மற்றும் மோதல் சூழ்நிலையை ரஷ்ய படைகள் தங்களது ஆயுதக் களஞ்சியத்தில் உள்ள மற்றொரு ஆயுதம். அதனால்தான் அவர்கள் இதை முறையாகவும் வெளிப்படையாகவும் பயன்படுத்துகிறார்கள்.

மனைவியின் அனுமதியுடன் உக்ரைனிய பெண்களை சீண்டும் ரஷ்ய வீரர்கள்: இதுவே எதிரிகளின் மற்றொரு ஆயுதம் | Wives Of Russian Troops Encourage To Rape WomenUkraine Women-உக்ரைனிய பெண்கள்(Reuters)

இதை  போர்க் குற்றமாக அங்கீகரிப்பதும், குற்றவாளிகள் அனைவரையும் இதற்கு பொறுப்பேற்க வைப்பதும் மிகவும் முக்கியமானது என்று ஒலேனா ஜெலென்ஸ்கா தெரிவித்தார்.

மனைவியின் அனுமதியுடன் ரஷ்ய வீரர்கள் அத்துமீறல்

உக்ரைனிய பெண்கள் மீதான இத்தகைய பாலியல் துன்புறுத்தல் மற்றும் அத்துமீறல்களை “ரஷ்ய வீரர்கள் வெளிப்படையாக தங்கள் உறவினர்களுடன் தொலைபேசியில் பேசுகிறார்கள், அதை நாங்கள் கைப்பற்றிய தொலைபேசி உரையாடல்களிலிருந்து மிகவும் வெளிப்படையாக இருப்பதை நாங்கள் காண்கிறோம்”

மனைவியின் அனுமதியுடன் உக்ரைனிய பெண்களை சீண்டும் ரஷ்ய வீரர்கள்: இதுவே எதிரிகளின் மற்றொரு ஆயுதம் | Wives Of Russian Troops Encourage To Rape WomenOlena Zelenska-ஒலேனா ஜெலென்ஸ்கா(Sky News)

உண்மையில், ரஷ்ய படை வீரர்களின் மனைவிகள் இதை ஊக்குவிக்கிறார்கள், “போ, அந்த உக்ரேனிய பெண்களைப் பலாத்காரம் செய், அதை என்னுடன் பகிர்ந்து கொள்ளாதே, என்னிடம் சொல்லாதே” என்று கூறுகிறார்கள்.

இதுபோன்ற காரணங்களால் தான் இதற்கு உலகளாவிய பதில் இருக்க வேண்டும் என்று நாங்கள் கேட்கிறோம் என்று உக்ரைனின் முதல் பெண்மணி ஒலேனா ஜெலென்ஸ்கா தெரிவித்தார்.

மனைவியின் அனுமதியுடன் உக்ரைனிய பெண்களை சீண்டும் ரஷ்ய வீரர்கள்: இதுவே எதிரிகளின் மற்றொரு ஆயுதம் | Wives Of Russian Troops Encourage To Rape WomenRussian army-ரஷ்ய ராணுவம்(Victor Berzkin/ZUMA)



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.