அதிர வைக்கும் காதல் கொலை! 5வது காதலனைக் கொல்ல உதவிய 4 காதலர்கள்

நாளந்தா: நாட்டில் தொடரும் கொலை சம்பவங்கள் பலரிடமும் பீதியைக் கிளப்பியிருக்கிறது. கணவரின் மரணத்திற்குப் பிறகு, தனியாக வாழ்ந்து வந்த ஒரு பெண், ஐந்தாவது காதலனைக் கொன்றார் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட பெண்,தனது நான்கு காதலர்களுடன் சேர்ந்து ஐந்தாவது காதலனைக் கொன்றார். கணவர் இறந்த பிறகு பலருடன் உறவு வைத்திருந்த பெண், நான்கு காதலர்களுடன் இணைந்து ஐந்தாவது காதலனைக் கொன்றதாக கூறப்படுகிறது. இந்த பரபரப்பான கொலை, பீகாரில் நடைபெற்ற சம்பவம் ஆகும். 

பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில் வசித்து வந்த 30 வயது பெண்ணின் சட்டவிரோத காதல் உறவுகள், அவரை கொலை செய்யும் அளவு கொண்டு சென்றுள்ளது. கணவர் இறந்த பிறகு 4 பேருடன் இணக்கமான காதல் உறவில் இருந்த அந்த இளம் கைம்பெண், ஐந்தாவதாக வந்த காதலனைக் கொன்றிருக்கிறார்.

தற்போது, போலீஸ் காவலில் இருக்கும் அந்தப் பெண்ணிடம் நடத்திய விசாரணையில் வெளிவந்த உண்மைகள் போலீசாரையே ஆச்சரியமடையச் செய்துள்ளது.  

நாளந்தாவில் பல்வபூர் கிராமத்தில் வசித்துவரும் பெண், அங்கு டீக்கடை நடத்தி வந்தார். கணவனை இழந்த அந்தப் பெண்ணுக்கு பலருடன் தொடர்பு இருந்துள்ளது. அதில் வயது முதிர்ந்த நான்கு பேருடன் தொடர்பு இருந்தது.  இதற்கிடையில், வயதான திரிபிட் ஷர்மா என்ற மற்றொரு முதியவரும் அந்தப் பெண்ணுடன் காதல் உறவில் இருந்திருக்கிறார்.

70 வயதான திரிபிட் ஷர்மாவுக்கும், டீக்கடை வைத்திருந்த பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இதனால் அந்த பெண்ணின் முன்னாள் காதலர்களில் ஒருவருக்கு கோவம் வந்துவிட்டது.  இதனால், புதிய காதலனை தீர்த்துக் கட்ட எண்ணிய அவருடன், அந்தப் பெண்ணும் அவரது பழைய காதலர்களும் திட்டமிட்டனர். 

அந்த பெண் திரிபிட் ஷர்மாவை அக்டோபர் 19 அன்று யாருமில்லாத இடத்திற்கு வரவழைத்தார். அங்கு மறைந்திருந்த நான்கு பேரும் திரிபிட் சர்மாவை அடித்துக் கொன்றனர். பிறகு சடலத்தை அடையாளம் காண முடியாத அளவுக்கு முகத்தை கல்லால் அடித்து நசுக்கிவிட்டனர். சடலத்தை புதிதாகக் கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தின் தண்ணீர் தொட்டியில் வீசிவிட்டனர். 

தண்ணீர் தொட்டியில் சடலம் இருந்தது  இரண்டு நாட்களுக்கு பிறகு தெரிய வந்ததும், சடலத்தை மீட்ட போலீசார் விசாரணையைத் தொடங்கினார்கள். சடலத்தை அடையாளம் தெரிந்துக் கொண்ட மகன் மிது குமார், தந்தை கொலை செய்யப்பட்டதாக அஸ்தவான் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தார்.

வழக்குத் தொடர்பாக போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வந்த நிலையில், இறந்தவர் அஸ்தவான் பாலிடெக்னிக் கல்லூரி அருகே உள்ள டீக்கடைக்கு அடிக்கடி வந்து செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இறந்தவரின் மொபைல் போனை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. போன் சுவிட்ச் ஆஃப் ஆக இருந்தது.

ஒரு மாதத்திற்குப் பிறகு, போன் சுவிட்ச் ஆன் செய்யப்பட்டதும், ​​ஏற்கனவே கண்காணிப்பில் இருந்த போன் நம்பர் செயல்படுவதைக் கண்ட போலீசார், தொழில்நுட்ப உதவியால், போன் உள்ள இடத்தைத் தெரிந்துக் கொண்டு டீக்கடை பெண்ணிடம் இருந்து மொபைலை மீட்டு அவரை காவலில் எடுத்து விசாரிக்க தொடங்கினர்.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இந்தக் கொலை தொடர்பான விஷயங்கள் அனைத்தையும் அந்தப் பெண் சொல்லிவிட்டார். அதை அடுத்து, இந்த வழக்கில் சமப்ந்தப்பட்ட பெண் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் . விசாரணையின் போது, ​​அனைவரும் அக்டோபர் 19 அன்று, முதியவர் திரிபிட் ஷர்மாவை தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு அழைத்துச் சென்றதையும் கொலை செய்ததையும் அனைவரும் ஒப்புக்கொண்டனர்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.