
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் ஆசிரியையிடம் மாணவர்கள் அநாகரீகமான கருத்துகளை தெரிவித்த இரண்டு வீடியோக்கள் சமூக ஊடக தளங்களில் வைரலானது.
27 வயதான ஆசிரியை ஒருவர், 12 ஆம் வகுப்பு மாணவர்கள் சிலர் தன்னை நீண்ட காலமாக துன்புறுத்துவதாகக் குற்றம் சாட்டினார்.
கிதாவுர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராத்னா இனயத்பூர் கிராமத்தில் உள்ள ஒரு மாணவி உட்பட 4 பள்ளி மாணவர்கள் அங்குள்ள பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

பள்ளி வளாகத்திற்குள் மாணவர்கள் தன்னிடம் காதலைக் கூறியபோது வரம்பு மீறுவதாக ஆசிரியை கண்டித்துள்ளார். ஆனால் அதை பொருட்படுத்தாமல் வீடியோ பதிவு செய்துள்ளனர்.
இது தவிர, வகுப்பறைக்குள் தன்னை அவதூறாக பேசிய வீடியோவும் சமூக ஊடகங்களில் வைரலானது என்று அவர் புகாரில் கூறினார். அந்த வீடியோக்களை அடிப்படையாக கொண்டு 16 வயதுடைய 4 மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து நான்கு மாணவர்களும் கைது செய்யப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in