சண்டிகர்: முன்னாள் கிரிக்கெட் வீரரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து கடந்த 1988-ம் ஆண்டு பஞ்சாபின் பாட்டியாலா பகுதியில் கார் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இதுதொடர்பான வழக்கில் சித்துவுக்கு கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்தது. இதைத் தொடர்ந்து பாட்டியாலா நகரில் உள்ள சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
சிறையில் சித்துவை சந்தித்த பின் அவரது மனைவி சீமா கூறும்போது, ‘‘சிறையில் நாள்தோறும் யோகா, உடற்பயிற்சிகளை சித்து செய்து வருகிறார். இதன் காரணமாக கடந்த 6 மாதங்களில் அவர் 35 கிலோ எடை குறைந்துள்ளார். தற்போது அவரது உடல் எடை 99 கிலோவாக உள்ளது. கல்லீரல் பாதிப்பு குறைந்து தற்போது நலமாக இருக்கிறார்’’ என்று தெரிவித்தார்.