தன்னை விட 11 வயது குறைவான நடிகையை மணக்கும் பிரபல நடிகர்? மகிழ்ச்சியில் குடும்பம்


பிரபல நடிகர் பிரபாஸும் நடிகை கிருத்தி சனோனும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபாஸ் – கிருத்தி சனோன்

பாகுபலி, பாகுபலி 2 என வரிசையாக ஹிட் படங்கள் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமடைந்தவர் தெலுங்கு நடிகர் பிரபாஸ் (43). ராமாயண கதையை மையமாக எடுக்கப்பட்டிருக்கும் ஆதிபுருஷ் திரைப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸும், சீதா கதாபாத்திரத்தில் ஹிந்தி நடிகை கிருத்தி சனோனும் (32) நடித்துள்ளனர்.

இந்த படப்பிடிப்பின் போது, இவர்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் திரையுலகில் பேசப்பட்டு வருகின்றது.

தன்னை விட 11 வயது குறைவான நடிகையை மணக்கும் பிரபல நடிகர்? மகிழ்ச்சியில் குடும்பம் | Prabhas Kriti Sanon Relationship

Instagram

குடும்பத்தார் மகிழ்ச்சி

இதற்கிடையே, சில நாள்களுக்கு முன்பு கிருத்தி சனோன் பேட்டி ஒன்றில், பிரபாஸை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்திருந்தார்.
பாலிவுட் லைஃப்பின் சமீபத்திய அறிக்கையின்படி, பிரபாஸ் கிருத்தி சனோனிடம் ஆதிபுருஷ் படப்பிடிப்பில் காதலை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இதையடுத்து சனோன் காதலை ஏற்று கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களின் காதல் விடயத்தை அறிந்து குடும்ப உறுப்பினர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் மற்றும் காதல் பறவைகளுக்கு தங்கள் ஆசீர்வாதங்களை வழங்கியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.