தொடர்ந்து மூன்று நாட்களில்… நடுக்கத்தில் இருந்து மீளாத லண்டன் நகரம்


லண்டன் நகரில் தொடர்ந்து மூன்று நாட்களில் ஆறு பேர் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கத்திக்குத்து தாக்குதல்

குறித்த சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், ஐவர் காயங்களுடன் சிகிச்சையில் உள்ளனர்.
சனிக்கிழமையன்று, குராய்டன் பகுதியில் வழக்கத்துக்கு மாறாக, இருவர் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

தொடர்ந்து மூன்று நாட்களில்... நடுக்கத்தில் இருந்து மீளாத லண்டன் நகரம் | London Crime Double Stabbings Across City

Image: David Nathan

இப்பகுதியில் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் அரிதாகவே பார்க்கப்படுகிறது.
அடுத்த நாள் மாலை நேரம், நியூஹாம் பகுதியில் இரு இளைஞர்கள் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

இதனையடுத்து, திங்கட்கிழமை வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் இளைஞர் இருவர் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காக அதில் 20 வயது கடந்த நபர் கொல்லப்பட்டதுடன், இன்னொருவர் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, ரிச்மண்டில் உடைந்த போத்தலால் குத்தப்பட்டதில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் தேம்ஸ்மீட்டில் இரண்டு 16 வயது இளைஞர்கள் குத்திக்கொலை செய்யப்பட்டனர்.

தொடர்ந்து மூன்று நாட்களில்... நடுக்கத்தில் இருந்து மீளாத லண்டன் நகரம் | London Crime Double Stabbings Across City

Image: David Nathan

கொலை வழக்கு விசாரணை

குராய்டன் பகுதியில் சனிக்கிழமை மதியத்திற்கு மேல் சுமார் 7.30 மணியளவில் கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதில் 49 மற்றும் 48 வயதுடைய இருவர் கத்தியால் தாக்கப்பட்ட காயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

தொடர்ந்து மூன்று நாட்களில்... நடுக்கத்தில் இருந்து மீளாத லண்டன் நகரம் | London Crime Double Stabbings Across City

Image: Google Maps

24 மணி நேரத்தில், கிழக்கு லண்டமில் இரு இளைஞர்கள் கத்தியால் தாக்கப்பட்ட நிலையில், காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
இருவருக்கும் 18 வயதிருக்கும் எனவும், ஆபத்தான நிலையில் அவர்கள் இல்லை எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், திங்கட்கிழமை பட்டப்பகலில் 20 வயது கடந்த நபர் கத்தியால் தாக்கி படுகொலை செய்யப்பட்டார்.
இன்னொருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து மாநகர பொலிசார் கொலை வழக்கு தொடர்பில் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.