`பள்ளி அட்மிஷன் முதல் பாஸ்போர்ட் வரை'… கட்டாயமாக்கப்படும் பிறப்பு சான்றிதழ் – சாதகமா, பாதகமா?

1969 -ம் ஆண்டில் இயற்றப்பட்ட பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டத்தின்படி, அனைவரின் பிறப்பு மற்றும் இறப்பு கட்டாயமாகப் பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலானவர்கள் பிறப்பு மற்றும் இறப்பின் விவரங்களைச் சரியாகப் பதிவு செய்வதில்லை.

இந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிச் சேர்க்கை, வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வது, மத்திய மற்றும் மாநில அரசின் பணி நியமனம், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் உள்ளிட்ட சேவைகளுக்கு இனிமேல் பிறப்புச் சான்றிதழ்களைக் கட்டாய ஆவணமாக்க, வரும் டிசம்பர் 7-ம் தேதி நடக்கவிருக்கும் குளிர்கால கூட்டத் தொடரில் மத்திய அரசு வரைவு மசோதாவைத் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளது.

இந்த மசோதா நிறைவேறும்பட்சத்தில், பள்ளியில் சேர்வது முதல் பாஸ்போர்ட் எடுப்பது வரை அனைத்திற்கும் பிறப்பு சான்றிதழ் கட்டாயமாக்கப்படும்.

பிறப்பு சான்றிதழ்

அதோடு பிறப்பு சான்றிதழ் மூலமாகச் சேமிக்கப்படும் தரவுகளின் அடிப்படையில், அந்நபர் 18 வயதை அடையும் போது தானாகவே அவரின் பெயர் வாக்காளர் அடையாள அட்டையில் சேர்க்கப்பட்டுவிடும். அதேபோல ஒருவர் இறக்கும் போதும் அவரது பெயர் பட்டியலில் இருந்து தானாகவே நீக்கம் பெற்று விடும். 

இதற்காக மக்கள் தனியாகச் சென்று விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இருக்காது. அதோடு மருத்துவமனை வழங்கும் இறப்பு சான்றிதழின் பிரதியை, உள்ளூரில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்து, இறப்புக்கான காரணத்தையும் தெரிவிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.