மளிகை கடை வருமானத்தில் 11 நாடுகளுக்கு பயணித்த விதவை பெண்! பிடித்த ஊர் லண்டன்.. சுவாரசிய தகவல்


கேரளாவில் மளிகை கடை வைத்திருக்கும் விதவை பெண் கடந்த 10 ஆண்டுகளில் தனது சேமிப்பு பணத்தின் மூலம் 11 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளது தொடர்பில் சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.

எர்ணாகுளத்தை சேர்ந்தவர் மாலி ஜாய். இவர் கணவர் 26 ஆண்டுகளுக்கு முன்னர் சிறிய மளிகை கடையை நடத்த தொடங்கினார்.
அவர் உயிரிழந்து 18 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் மாலி தொடர்ந்து மளிகை கடையை நடத்தி வருகிறது.

அவருக்கு முக்கிய வருமானம் மளிகைக் கடையில் இருந்து வந்தது. மகனுக்கு வேலை கிடைத்து, மகளுக்குத் திருமணமான பிறகு, அவள் கையில் அதிக பணம் இருப்பதைக் கண்டுபிடித்தார்.

மளிகை கடை வருமானத்தில் 11 நாடுகளுக்கு பயணித்த விதவை பெண்! பிடித்த ஊர் லண்டன்.. சுவாரசிய தகவல் | Kerala Women Travelled 11 Countries

onmanorama

ஒருநாள் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் மாலியை தங்களுடன் சுற்றுலா பயணத்திற்கு அழைத்தனர்.
அதன்படி அவர்களுடன் ஊட்டி, மதுரை, மைசூரு போன்ற இடங்களுக்கு சென்றுவிட்டார்.

இதன்பிறகு பயணம் செய்வதில் மாலிக்கு நாட்டம் அதிகரித்தது. அதன்படி 2012ல் முதல் முறையாக ஐரோப்பாவுக்கு மாலி பயணித்தார்.
பயணத்திலிருந்து திரும்பி வந்த பிறகு, அவர் அடுத்த பயணத்திற்காக பணம் சேமிக்க ஆரம்பித்தார்.

அதன்படி பத்தாண்டுகளில் பிரித்தானியா (லண்டன்), மலேஷியா, சிங்கப்பூர், நெதர்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 11 நாடுகளுக்கு பயணித்துள்ளார்.
மாலி தனது பயணத்திற்காக ஒருபோதும் கடன் வாங்கியதில்லை, பெரும்பாலான பணம் மளிகைக் கடை வருமானத்தில் இருந்து வருகிறது.

சில நேரங்களில், தனது தங்க நகைகளை அடகு வைத்தும் பயணித்திற்கான பணத்தை தயார் செய்திருக்கிறார், ஆனால் பின்னர் தனது கடனை செலுத்தி நகைகளை மீட்டிருக்கிறார்.
பிரித்தானியாவுக்கு 15 நாள் பயணமாகச் சென்ற பிறகு அவளுக்குப் பிடித்தமான இடமாக லண்டன் ஆனது.

மளிகை கடை வருமானத்தில் 11 நாடுகளுக்கு பயணித்த விதவை பெண்! பிடித்த ஊர் லண்டன்.. சுவாரசிய தகவல் | Kerala Women Travelled 11 Countries



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.