சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் பல்வேறு திட்டங்களின் தொடக்க விழாவில் பங்கேற்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அமைச்சர் மா சுப்பிரமணியன் அங்கு வருகை தந்தார்.
அவர் மருத்துவமனையின் கை அறுவை சிகிச்சை சிறப்பு பிரவு துறை கட்டடத்தில், ஒவ்வொறு நிகழ்ச்சியாக துவக்கி வைத்து விட்டு, கை அறுவை சிகிச்சை சிறப்பு பிரிவை பார்வையிட்டு விட்டு, 3ஆவது தளத்தில் இருந்து தரைத்தளத்திற்கு செல்ல லிஃப்டில் ஏறினார்.
அவர் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக லிஃப்டின் இயக்கம் தடைப்பட்டது. அப்போது அவருடன் மருத்துவர்கள் உள்பட பலரும் இருந்தனர். லிஃப்ட் நின்றதால் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
பின்னர் லிப்ட் ஆப்பரேட்டர் உதவியுடன் அங்கிருந்த ஊழியர்கள் உயர்ந்த மேஜைக்கொண்டு வந்து, லிப்ட் அருகில் வைத்து லிப்ட் கதவை திறந்து, அமைச்சர் மற்றும் அதிகாரிகளை மீட்டனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கழக இளைஞரணி செயலாளர் திரு.உதயநிதி ஸ்டாலின் MLA அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று தரமணி அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் 4500 மரக்கன்றுகள் நடும் விழா துவக்கி வைக்கப்பட்டு, மரக்கன்றுகள் நடப்பட்டது. @Udhaystalin #Masubramanian #TNHealthminister #DMK4TN pic.twitter.com/Mw5IE9jufp
— Subramanian.Ma (@Subramanian_ma) November 29, 2022