உக்ரைன் பெண்களை குறிவையுங்கள்… புடின் தனது வீரர்களுக்கு அளித்துள்ள மோசமான உத்தரவு


போரின் ஒரு பகுதியாக, உக்ரைன் பெண்கள் மீதான பாலியல் தாக்குதலை ஆயுதமாக்க புடின் உத்தரவிட்டுள்ளதாக குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார் உக்ரைன் நாட்டின் முதல் பெண்மணி.

புடின் தனது வீரர்களுக்கு அளித்துள்ள மோசமான உத்தரவு

புடின், உக்ரைன் பெண்களை வன்புணர தனது வீரர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக உக்ரைன் நாட்டின் முதல் பெண்மணியும், உக்ரைன் ஜனாதிபதியின் மனைவியுமான Olena Zelenska அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்றைத் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் பெண்களை குறிவையுங்கள்... புடின் தனது வீரர்களுக்கு அளித்துள்ள மோசமான உத்தரவு | Bad Orders From Putin To His Soldiers

Image: PA

மேலும் ஒரு அதிர்ச்சியளிக்கும் செய்தி

லண்டனில் நடைபெற்ற, போர்களில் பாலியல் வன்முறையைத் தடுப்பது தொடர்பான மாநாட்டில் பேசிய Olena, இன்னொரு அதிர்ச்சியளிக்கும் செய்தியையும் தெரிவித்தார்.

அது என்னவென்றால், ரஷ்யப்படைவீரர்களின் மனைவிகளே உக்ரைன் பெண்களை வன்புணருமாறு தங்கள் கணவர்களை ஊக்குவிக்கிறார்கள் என்பதுதான்.

உக்ரைன் பெண்களை குறிவையுங்கள்... புடின் தனது வீரர்களுக்கு அளித்துள்ள மோசமான உத்தரவு | Bad Orders From Putin To His Soldiers

Image: Mikhail Metzel/AP/REX/Shutterstock

பாலியல் தொடர்பான குற்றங்கள் வன்முறை தொடர்பானவையோ அல்லது மக்களை அச்சுறுத்துவதற்கானவோ மட்டுமின்றி, உக்ரைன் போரைப் பொருத்தவரை, அவை ஆயுதமாகவே பயன்படுத்தப்படுகின்றன என்றார் அவர்.

ஆகவேதான் இந்த மோசமான செயல்களை போர்க்குற்றங்களாக அங்கீகரித்து, குற்றவாளிகள் அனைவரையும் நீதியின் முன் நிறுத்தவேண்டும் என்று கோரியுள்ளார் Olena.
 

உக்ரைன் பெண்களை குறிவையுங்கள்... புடின் தனது வீரர்களுக்கு அளித்துள்ள மோசமான உத்தரவு | Bad Orders From Putin To His Soldiers

Image: PA



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.