தாய்லாந்தில் தம்பதி ஒன்று 58 மணி நேரம், 35 நிமிடங்கள், 58 நொடிகள் விடாமல் முத்தம் கொடுத்து உலக சாதனை படைத்தனர். எச்சாகை திரநராத் மற்றும் லக்ஷா திரநராத் தம்பதி, விடாமல் 58 மணி நேரம் முத்தம் கொடுத்து கின்னஸ் சாதனை பட்டியலில் இணைந்தனர்.
தாய்லாந்தை சேர்ந்த ஏக்கச்சாய் லக்ஷனா என்ற தம்பதி தான் இந்த சாதனைக்கு சொந்தக்காரர்கள். 2013ல் Valentine’s Day அன்று நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் இவர்கள் பங்கேற்றனர். ‘ரிப்லீஸ் பிலீவ் இட் ஆர் நாட்’ என்ற நிறுவனம் இந்த சிறப்பு நிகழ்ச்சியை தாய்லாந்தின் பட்டாயா என்ற இடத்தில் நடத்தியது. பிப்ரவரி 12 முதல் 14 ஆம் தேதி வரை இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில் மொத்தம் ஒன்பது தம்பதிகள் பங்கேற்றனர். இந்த ஒன்பது தம்பதிகளில் ஒரு 70 வயது தம்பதியும் பங்கேற்றனர். இந்த போட்டியில் கலந்துகொள்பவர்கள் நின்றுக்கொண்டே அவர்களது இணையருக்கு முத்தம் கொடுக்கவேண்டும்.
ஒரு முறை முத்தம் கொடுக்க தொடங்கிய பின்னர் அவர்கள் விலகிவிட்டால் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். உணவு, தண்ணீர் என எதை சாப்பிட்டாலும் இவர்கள் முத்தம் கொடுப்பதை நிறுத்தக்கூடாது. கழிவறையை பயன்படுத்த வேண்டும் என்றாலும் இவர்கள் ஒருவரை ஒருவர் விட்டு விலகாமல் தான் இருக்கவேண்டும்.
இப்படி ஒருவரை ஒருவர் பிரியாமல் லிப் லாக் செய்துகொண்டே இரண்டு நாட்களுக்கும் மேலாக நின்றுள்ளனர் ஏக்கான்சாய் லக்ஷன தம்பதி. “இரண்டறை நாட்கள் நின்றுக்கொண்டும், தூங்காமலும் இருந்ததனால் இவர்கள் களைத்து இருக்கின்றனர்” என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறினர்.
இந்த போட்டியில் வென்ற ஏக்கான்சாய் லக்ஷனாவுக்கு இரண்டு வைர மோதிரங்களும், அன்றைய தேதியில் $3,300 பணமும் பரிசாக வழங்கப்பட்டது. 8 வருடங்களாக தொடரும் கின்னஸ் சாதனை.இப்போது வரை இவர்களது சாதனை முறியடிக்கப்படவில்லை.