குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மெயின் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குற்றாலம் மெயினருவியில் ஆர்ச்சை தொட்டபடி தண்ணீர் கொட்டியது. மேலும் ஐந்தருவியில் அனைத்து கிளைகளும் ஒன்றாக தோன்றியபடி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் நேற்று இரவு முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இன்று காலையிலும் அருவிகளில் தண்ணீர் தொடர்ந்து ஆர்ப்பரித்து கொட்டி வந்ததால் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் குளிக்க முடியாமல் அவர்கள் அருவிக்கரைகளில் ஏமாற்றத்துடன் காத்திருந்தனர்.
குறிப்பாக ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மற்றும் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பி வரும் பக்தர்கள் குற்றாலம் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.