பாதுகாப்பு குளறுபடியா? அப்ப பிரதமரின் SPG என்னாச்சு? அண்ணாமலைக்கு காங்கிரஸ் பதிலடி!

தமிழகத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை செயல்பாடுகள் தொடர்ந்து பேசுபொருளாக மாறி வருகின்றன. ஆளுங்கட்சியை விமர்சிப்பது, ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைப்பது என அதிரடியான பாணியில் செயல்பாடுகளை மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்தது தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

செஸ் ஒலிம்பியாட் போட்டி

இதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவை ஒட்டி நேரு விளையாட்டரங்கில் நடந்த நிகழ்வில் பங்கேற்க பிரதமர் மோடி வந்திருந்த போது பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டிருந்தது. பிரதமர் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட்ட டோர் பிரேம் மெட்டல் டிடெக்டர் மற்றும் பிற மெட்டல் டிடெக்டர்கள் சரியாக வேலை செய்யவில்லை.

பாதுகாப்பில் குறைபாடு

இந்த விஷயம் மத்திய புலனாய்வு ஏஜென்சிகள் மூலம் தற்போது தான் தெரியவந்துள்ளது. இதுபற்றி தகவலறிந்து மாநில அரசு அச்சத்தில் இருக்கிறது. எனவே இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மாநில அரசின் பொறுப்பாளர்கள் மீது ஆளுநர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் பேசுகையில் பிரதமருக்கே பாதுகாப்பு வழங்காத நிலையில் சாதாரண மக்களுக்கு எப்படி பாதுகாப்பு கொடுப்பர்.

காங்கிரஸ் பதிலடி

தமிழக அரசு உடனடியாக அனைத்து கோயில்களிலும் இருக்கும் மெட்டல் டிடெக்டர் வேலை செய்கிறதா? என்பதை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் வாழப்பாடி ராம சுகந்தன் தனது ட்விட்டரில், பிரதமர் மோடி தமிழகம் வந்த போது பாதுகாப்பு குறைபாடு இருந்ததாக அண்ணாமலை கூறுகிறாரே?

என்ன காரணம்?

அப்படியெனில் SPG என்ன செய்து கொண்டிருந்தது? SPG எனப்படுவது சிறப்பு பாதுகாப்பு படை. இதன் ஒரேவொரு வேலை பிரதமருக்கு பாதுகாப்பு அளிப்பது தான். அப்படியெனில் அவர்கள் சரியாக வேலை செய்யவில்லையா? இந்த நேரத்தில் பாதுகாப்பு குளறுபடி விஷயத்தை பேச வேண்டியதன் அவசியம் என்ன?

பாரம்பரிய உடையில் பிரதமர்

பாதுகாப்பில் குறை என்று நீங்கள் கண்டறிந்த போதே பிரச்சினையை எழுப்பியிருக்க வேண்டுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் கடந்த ஜூலை – ஆகஸ்ட் மாதத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்பட்டது. சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த செஸ் போட்டி முதல்முறை தமிழகத்தில் நடத்தப்பட்டது மிகுந்த முக்கியத்துவம் பெற்றது.

இதையொட்டி தமிழக அரசு சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தது. சென்னை முதல் மகாபலிபுரம் வரை விழாக்கோலம் பூண்டது. தொடக்க விழா நேரு விளையாட்டரங்கில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. அதில் பங்கேற்க பிரதமர் மோடி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.