வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த 'பொன்னியின் செல்வன்' பட நடிகை!

தமிழில் தனுஷுக்கு ஜோடியாக ‘ஜகமே தந்திரம்’ நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, இந்த படத்தை விட அவருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கி கொடுத்தது பொன்னியின் செல்வன் படம்-1 படம் தான். பொன்னியின் செல்வன்-1 படத்தில் பூங்குழலி என்கிற கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தார், குந்தவை அழகா? நந்தினி அழகா? என்று ரசிகர்கள் சிலர் போட்டிபோட, பூங்குழலி தான் அழகு என்று தனி ரசிகர் கூட்டம் போட்டியில் களமிறங்கியது. அந்த படத்தில் சமுத்திரகுமாரி என்கிற இந்த பூங்குழலியை ரசிக்காதவர்கள் என்று யாரும் இருக்கமாட்டார்கள், அருண்மொழிவர்மன் மீது ஒருதலை காதல் கொண்டிருப்பதிலும் சரி, மற்றவர்களிடம் கம்பீரமாக நடந்துகொள்வதிலும் சரி இவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். படத்தின் இரண்டாம் பாதியில் இவர் என்ட்ரி ஆனாலும் ரசிகர்களின் மனதில் நிலைத்துநிற்கிறார்.

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் ஐஸ்வர்யா லட்சுமியை காண ரசிகர்கள் பலரும் ஆர்வமாக காத்துகொண்டு இருக்கின்றனர். இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் நடிகை தனது சம்பளத்தை உயர்த்தியிருப்பதாக சமீபகாலமாக இணையத்தில் பல செய்திகள் பரவி வந்தது, தற்போது இந்த வதந்திகளுக்கெல்லாம் நடிகை ஐஸ்வர்யா முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். தற்போது இவர் செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ‘கட்ட குஸ்தி’ என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார், இப்படம் டிசம்பர் 2ம் தேதியன்று வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ‘கட்ட குஸ்தி’ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா லட்சுமி கலந்துகொண்டவர், தான் சம்பளத்தை உயர்த்திவிட்டதாகக கூறப்படும் வதந்திகள் குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவரை பேசுகையில், “பொன்னியின் செல்வன்-1 படத்திற்கு பிறகு நான் எனது சம்பள பேக்கேஜை உயர்த்தி இருப்பதாக கூறப்படும் செய்திகள் உண்மையல்ல, ஒரு படம் என்பது முழுக்க முழுக்க அந்த இயக்குனரின் கைவண்ணத்தில் உருவாகுவது தான், அதில் தனக்கு என்ன பங்களிப்பு இருக்கிறதோ அதை மட்டும் தான் கொடுக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.