சுவிட்சர்லாந்து தெருவில் கிடந்த 20,000 டாலர்கள்: தவறவிட்ட நபருக்கு காத்திருந்த மகிழ்ச்சியான அதிர்ச்சி


சுவிட்சர்லாந்து நகர தெருக்களில் 20,000 டாலர்கள் தவறவிட்ட வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி நபர் ஒருவருக்கு வியப்பை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

பணத்தை தவறவிட்ட மாற்றுத்திறனாளி

சுவிட்சர்லாந்தில் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஒருவர், நாட்டின் தெற்கு பகுதியில் சிறிய நகரமான மார்ட்டிக்னியில் உள்ள வங்கிக்கு சென்று 20,000 சுவிஸ் பிராங்குகளை ($21,260) திரும்ப பெற்றுளார்.

அப்போது அந்த நபர் வங்கிக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த தனது காரில் ஏறிய போது பணத்தை வைத்து இருந்த உரையை தவற விட்டுள்ளார்.

Swiss Franc- சுவிஸ் பிராங்க்Swiss Franc- சுவிஸ் பிராங்க்

வீட்டிற்கு வந்து பார்த்த போது தனது உரையை காணவில்லை என்பதை உணர்ந்த அந்த நபர் அதிர்ச்சியடைந்துள்ளார். 

வீட்டிற்கு வரும் வழியில் யாரோ பிக்பாக்கெட் செய்து இருக்கு வேண்டும் என்று கருதி திருடப்பட்ட பணம் குறித்து காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.


ஆச்சரியம் தந்த தம்பதி

மாற்றுத்திறனாளி நபர் பணத்தை தவறவிட்டதை அடுத்து அந்த தெரு வழியாக பயணித்த தம்பதி ஒருவர், நோட்டு கட்டு ஒன்று தெருவில் கிடப்பதை பார்த்து அதை கையில் எடுத்துள்ளனர்.

அந்த நோட்டு கட்டுகளுடன் கூடுதலாக நபர் ஒருவரின் முகவரி அடங்கிய திரும்பப் பெறுதல் சீட்டு ரசீது இருந்ததை கண்ட தம்பதி, பணத்தை முழுவதுமாக திருப்பித் தர அவரது வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

Swiss Franc- சுவிஸ் பிராங்க்Swiss Franc- சுவிஸ் பிராங்க்

தான் தவறவிட்ட பணத்தை வழங்குவதற்காக வீட்டிற்கே வந்த தம்பதிகளுக்கு மாற்றுத்திறனாளி நபர் நன்றியை வெளிப்படுத்தியுள்ளார்.

அத்துடன் அந்த தம்பதியருக்கு 500 பிராங்குளை கொடுத்து உள்ளார் அந்த மாற்றுத்திறனாளி நபர்.

இந்த சம்பவத்தை குறிப்பிட்டு சுவிட்சர்லாந்து பொலிஸார் வெளியிட்டுள்ள குறிப்பில், “சுவிட்சர்லாந்து குடிமகனின் அழகான நேர்மையின் கதை” என தெரிவித்துள்ளனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.