செல்லப்பிராணிகளுக்கான உணவை… பிரித்தானிய குடும்பங்கள் தொடர்பில் வெளியாகும் அதிர்ச்சி தகவல்


வாழ்க்கைச் செலவு நெருக்கடியை எதிர்கொள்ளும் பிரித்தானிய குடும்பங்கள் பல செல்லப்பிராணிகளுக்கான உணவை உட்கொள்ளும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

செல்லப்பிராணிகளுக்கான உணவை

பொருளாதார நெருக்கடியால் அவதிப்படும் மக்களுக்கு போதிய உதவிகளை முன்னெடுக்கவும், கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
20 ஆண்டுகளாக சமுதாய பணிகளில் ஈடுபட்டுவரும் மார்க் சீட் என்பவர் தெரிவிக்கையில்,

செல்லப்பிராணிகளுக்கான உணவை... பிரித்தானிய குடும்பங்கள் தொடர்பில் வெளியாகும் அதிர்ச்சி தகவல் | Households Struggle Families Eating Pet Food

@shutterstock

பணவீக்கம் அதிகரித்துள்ளதால், இனி கொள்கைகள் என்பது மக்கள் மீது கவனம் செலுத்துவதாக இருக்க வேண்டும், குறிப்பிட்ட இடங்கள் மீதல்ல என குறிப்பிட்டுள்ளார்.

கார்டிஃப், ட்ரோபிரிட்ஜ் பகுதியில் சமுதாய உணவுக் கூடம் ஒன்றை முன்னெடுத்துவரும் மார்க் சீட் மக்களின் தற்போதைய நிலையை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
பசியை போக்க மக்கள் செல்லப்பிராணிகளுக்கான உணவை உட்கொள்வது என்பது தாங்க முடியாத அதிர்ச்சியை அளிப்பதாக மார்க் சீட் தெரிவித்துள்ளார்.

மெழுகுவர்த்தி வெப்பத்தில் மக்கள் உணவை சூடுபடுத்துகிறார்கள் என்பதை எப்படி எடுத்துக்கொள்வது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கார்டிஃப் பகுதியில் சுமார் 160 குடும்பங்களுக்கு உணவு மற்றும் அன்றாடத் தேவைகளுக்கான பொருட்களை அளித்து உதவிவரும் இவரது அமைப்பானது, உணவு பற்றாக்குறையை போக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதைவிட மோசமான நிலை உருவாகலாம்

கடந்த 41 ஆண்டுகளில் இல்லாத பணவீக்கம் நாட்டில் ஏற்பட்டுள்ளது என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், இதைவிட மோசமான நிலை உருவாகலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

செல்லப்பிராணிகளுக்கான உணவை... பிரித்தானிய குடும்பங்கள் தொடர்பில் வெளியாகும் அதிர்ச்சி தகவல் | Households Struggle Families Eating Pet Food

@PA

சராசரியாக பிரித்தானிய குடும்பம் ஒன்று கடந்த ஆண்டைவிடவும் வெப்பமூட்டுதல் மற்றும் விளக்குகளுக்காக 88.9 சதவீதம் அதிகமாகவே கட்டணம் செலுத்தி வருகிறது.
மேலும், பால், வெண்ணெய், பாலாடைக்கட்டி, இறைச்சி மற்றும் ரொட்டி ஆகியவை கடந்த மாதம் 42 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

இது 1980ற்கு பிறகு மிக அதிகம் எனவும் கூறுகின்றனர்.
மேலும், 2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் ஒரு சராசரி குடும்பம் 4,960 பவுண்டுகளை பல்பொருள் அங்காடியில் செலவழிக்கும் நிலை ஏற்படும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.