திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அருகே பூமாலை பட்டி பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பவர் ஓய்வு பெற்ற சுகாதாரத்துறை அலுவலர். இவருக்கு 45 வயதில் ராஜா என்ற மகன் இருந்துள்ளார். ராஜா விவசாயியாக இருந்து 10 ஆண்டுகளுக்கு முன் லண்டன் சென்று ஒரு தனியார் நிறுவனத்தில் சில ஆண்டுகள் வேலை செய்து வந்துள்ளார்.
சமீபத்தில் சொந்த ஊருக்கு திரும்பியவர் திருப்பூரில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவர் பல சிறுமிகளின் வீடியோக்கள், ஆபாச புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை பதிவிறக்கம் செய்து லண்டன் போன்ற நிறைய நாடுகளில் இருக்கும் வெப்சைடுகளில் பதிவேற்றம் செய்து பல கோடி ரூபாய் சம்பாதித்து வந்துள்ளார்.
இந்த தகவல் சிபிஐக்கு தெரிய வர அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தி ராஜா ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவு செய்திருப்பதை கண்டறிந்தனர்.
இதனை அடுத்து, அவரது வீட்டில் சோதனை நடத்தி அங்கிருந்த லேப்டாப்புகள், கணினி, செல்போன், ஹார்ட் டிஸ்க் மற்றும் பென் டிரைவ் உள்ளிட்டவற்றை கைப்பற்றி ஆராய்ச்சி செய்தனர்.
அதில், நிறைய சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இருப்பதை பார்த்து அதிகாரிகளே அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின், அவர் மிகப்பெரிய நெட்வொர்க்குடன் தொடர்பில் இருப்பதும் கண்டறியப்பட்டது.
இதை பயன்படுத்தி ராஜா பணம் பார்த்து வந்த விஷயம் போலீசுக்கு தெரிய வந்துள்ளது. இது போன்ற ஆபாச வீடியோக்கள் எங்கிருந்து கிடைத்தது என்று விசாரித்து வருகின்றனர்.