தயாரிப்பாளர் முரளி மரணம் – முதலமைச்சர் இரங்கல்

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக இருந்தவர் முரளிதரன். லட்சுமி மூவி மேக்கர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரராக இருந்த முரளி கமல், விஜயகாந்த், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி ஹீரோக்கள் நடித்த படங்களை தயாரித்தவர்.,. இவர் தயாரித்த முக்கியமான படங்களில் புதுப்பேட்டை, அன்பே சிவம், உள்ளிட்ட படங்கள் அடக்கம். தயாரிப்பாளராக மட்டுமின்றி விநியோகஸ்தாராகவும் சிறந்து விளங்கியவர் முரளிதரன்.

இவர் கடைசியாக 2015ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான சகலகலா வல்லவன் படத்தை தயாரித்திருந்தார். அந்தப் படம் தோல்வியை சந்தித்தது. அதன் பிறகு எந்த படத்தையும் தயாரிக்காமல் இருந்த அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில் கும்பகோணத்தில் அவர் நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகத்தினர், ரசிகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முரளிதரனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், “தமிழ்த் திரையுலகின் முன்னணி படத்தயாரிப்பு நிறுவனமான லட்சுமி மூவீ மேக்கர்ஸ்-இன் அதிபர்களுள் ஒருவரான திரு.கே.முரளிதரன் அவர்கள் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன்.

அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறே” என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.