பிக்பாஸ் சீசன் 6 தமிழ் நிகழ்ச்சியில் விக்ரமன், ஆசிம் உள்ளிட்டோர் விறுவிறுப்பாக விளையாடிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த வார எலிமினேஷனில் யார் வெளியேறப்போகிறார்கள் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதுவும் டபுள் எவிக்ஷன் இருக்க வாய்ப்பு இருக்கிறது என பேச்சு அடிபடுகிறது. அப்படி டபுள் எலிமினேஷன் இருந்தால், யார் வெளியேறப்போகிறார்கள்? என்ற சஸ்பென்ஸ் இருக்கும் சூழலில் இரண்டு பேரின் பெயர்கள் பிரதானமாக அடிபடுகிறது.
குயின்சி மற்றும் மைனா நந்தினி ஆகியோர் இப்போதைக்கு குறைவான வாக்குகள் பெற்ற போட்டியாளர்களாக இருப்பதால், இவர்கள் வெளியேற வாய்ப்பு இருப்பதாக யூகிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், மைனா நந்தினி விஜய் டிவியின் ஆஸ்தான கலைஞரில் ஒருவராக இருப்பதால் அவரை வெளியேற்ற வாய்ப்பு குறைவு என்றும் கூறப்படுகிறது. அப்படி அவருக்கு பதில் இன்னொருவரை வெளியேற்ற பிக்பாஸ் முடிவெடுத்தால் அது யாராக இருக்கும்? என்பதை ரசிகர்கள் யூகங்களை கிளப்பிக் கொண்டிருகின்றனர். எதிர்பாராததை எதிர்பாருங்கள் என கமல்ஹாசன் அடிக்கடி கூறினாலும், டிஆர்பிக்காக குறைவான வாக்குகளை பெற்ற போட்டியாளர்களை கூட வீட்டில் இருக்க வைத்துவிட்டு, நல்ல போட்டியாளர்களை பிக்பாஸ் வெளியேற்றுவதாகவும் விமர்சனம் இருக்கிறது.
ஒருவேளை டபுள் எலிமினேஷன் இல்லை என்றால், குயின்சி ஏறத்தாழ வெளியேற்றப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறதாம். அதேநேரத்தில் வைல்டு கார்டு என்டிரியும் இந்த வாரம் இருக்கும் என கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு பிரபலங்களிடம் பிக்பாஸ் டீம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவரை உள்ளே அனுப்பலாமா? அல்லது புதிய முகத்தை கொண்டு வரலாமா? என்பது குறித்தும் தீவிரமாக ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சஸ்பென்ஸூம் இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் என்பதால், பிக்பாஸ் தமிழின் எதிர்வரும் நாட்களை காண பார்வையாளர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.