எல்லையில் பதற்றம்…பயங்கர ஆயுதங்கள் மீட்பு!

காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுப்பகுதி அருகே பயங்கர ஆயுதங்களை பாதுகாப்புப்படையினர் மீட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் உரி செக்டரில் புலனாய்வு அமைப்புகள் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநில காவவர்கள், பயங்கரவாதிகளின் ஊடுருவல் குறித்து தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், இந்திய ராணுவம் நவம்பர் 29 முதல் டிசம்பர் 1 வரை கட்டுப்பாட்டு எல்லைக்கு அருகே தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

இந்த நடவடிக்கையின் போது இரண்டு ஏகே 74 தாக்குதல் துப்பாக்கிகள், இரண்டு சீன துப்பாக்கிகள், இரண்டு ஏகே 74 தாக்குதல் ரைபிள் தோட்டாக்கள், இரண்டு கைத்துப்பாக்கி தோட்டாக்கள், 117 ஏகே 74 தாக்குதல் துப்பாக்கி வெடிமருந்துகள் மற்றும் போதைப் பொருட்கள் ஆகியவற்றை பாதுகாப்பு படையினர் கண்டறிந்து மீட்டனர்.

 

இந்த நடவடிக்கையின் மூலம் எதிரிகளின் திட்டங்களை பாதுகாப்புப்படையினர் வெற்றிகரமாக முறியடித்தனர். இதனால் நாட்டின் எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் பதற்றமும் அதிகரித்துள்ளது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.